ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் அதாகர் பகுதியில் கரோனா தனிமைப்படுத்தல் மையம் உள்ளது. இங்கு ஏராளமான மக்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் சுற்றித்திரிந்த எறும்புத்தின்னி ஒன்று, தனிமைப்படுத்தல் மையத்திற்குள் நுழைந்துள்ளது.
இதைப் பார்த்த மக்கள், உடனடியாக வனத் துறைக்குத் தகவல் அளித்தனர். தகவலின்பேரில் விரைந்த அதாகர் வனத் துறை, பெண் எறும்புத்தின்னியைப் பத்திரமாக மீட்டனர்.
மேலும், கரோனா தனிமைப்படுத்தல் மையத்திற்கு எறும்புத்தின்னி வந்த காரணத்தினால் கரோனா தீநுண்மி பரவியிருக்க அதிகளவு வாய்ப்புள்ளது எனச் சுகாதாரத் துறை அலுவலர்கள் கருதினார்கள்.
இதையடுத்து, தற்போது எறும்புத்தின்னிக்கு கரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர். மாநிலத்தில் கரோனா சோதனைக்கு எறும்புத்தின்னி மாதிரி அனுப்பப்படுவது இதுவே முதல் முறை.
இதையும் படிங்க: ஊரடங்கால் ஆபத்தில் இருக்கும் ஆப்பிரிக்க காண்டாமிருகங்கள்!