ETV Bharat / bharat

பெருந்தொற்று காலத்தில் பெருகிவரும் போலி சானிடைசர் வர்த்தகம் - கரோனா பெருந்தொற்று காலம்

நாடு முழுதவதும் கரோனா பெருந்தொற்று பரவிவரும் சூழலில் போலி சானிடைசர் வர்த்தகம் நாட்டின் பெரு நகரங்களில் பெருகிவருகிறது. இது குறித்த சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம்.

Sanitizer
Sanitizer
author img

By

Published : Aug 26, 2020, 8:51 PM IST

ஏதும் அறியா அப்பாவி மக்களை உயிர் பலிவாங்கும் கலப்பட மற்றும் போலி பொருட்களை உற்பத்தி செய்யும் வணிகத்தில் ஈடுபடும் முறைகேடு கும்பல்கள் காரணமாக கலியுகம் என்பது கல்டி எனும் கலப்பட யுகமாக மாறி இருகிறது. எந்த ஒரு பொது சுகாதார கொள்கைக்கான வழி முறைகளையும் பின்பற்றாமல், கரோனா வைரஸ் பெருந்தொற்றின் விளைவாக இந்த குழுக்கள் வந்திருக்கின்றன. கைசுத்தம் செய்தல் என்ற முக்கியத்துவத்தை ஆதாயமாகக் கொண்டு இந்த கும்பல்கள் செயல்படுகின்றன.

இந்த சூழலை முழுவதுமாக தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் இந்த கும்பல், சந்தையில் போலியான மற்றும் கலப்பட சானிடைஸர்களை தயாரிக்கக்கூடிய பல திட்டங்களுடன் வந்திருக்கின்றன. சீனா, வங்கதேசம் ஆகியவை இதுபோன்ற முறைகேடான சதிகாரர்களை ஊக்குவிக்கின்ற. அதே நேரத்தில் இங்கிலாந்து, பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகள் உணவு பாதுகாப்பு முறைகளை கண்காணிப்பதற்கான நடவடிக்கை முறைகளை அதிகரித்திருக்கின்றன.

எனினும், உள்ளூர் சந்தையில் கலப்படம் மற்றும் போலிகளைத் தடுப்பதற்கு முறையான தடுப்பு முறைகள் இல்லாததை சாதகமாக எடுத்துக் கொண்டு இந்த கும்பல்கள் தங்களின் வணிகத்தைக் கட்டமைத்திருக்கின்றன. சட்டங்கள் மற்றும் வழிமுறைகள் எந்த ஒரு இடையூறும் இல்லாமல், முறையாக உருவாக்கப்படும்போதும், அமல்படுத்தப்படும் போதுமட்டுமே அவை உரிய பலன்களைக் கொண்டதாக இருக்கும்.

சட்டவிரோத வணிக யோசனையுடன் வந்திருக்கும் இவர்கள், இப்போதைய சூழலை கலப்பட பொருட்கள் நிறைந்ததாக மாற்றுவதற்கான செயல்பாடுகளிலும் இந்த பணம் பண்ணுபவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். போலிகளை தயாரிக்கும் கும்பல்களை அழிக்க தவறும்போது கண்காணிப்பு முறைகளின் உபயோகம் கேள்விக்குள்ளாகிறது, பொதுவான பொது சுகாதாரதம் அழிக்கப்படுகிறது.

இதற்கிடையே, பல்வேறு நிர்வாக முறைகள், நடைமுறைகளில் குறைபாடு ஏற்படும் நாட்டில் பால் மற்றும் பருப்பு வகைகள் முதல் எண்ணைய் மற்றும் மசாலாபொருட்கள் வரை இயல்பிலேயே கலப்படம் நிறைந்தவையாக கண்டறியப்படுகின்றன என்று சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக , கைசுத்தம் செய்தல் என்பது முக்கியத்துவம் பெற்று விளங்குவதால், அதைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் கும்பல்கள் உருவாகுகின்றன. சானிடைஸர்களுக்கு அதிக அளவிலான தேவைகள் இருப்பதால், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு, 200 மில்லி சானிடைஸர்கள் அதிகபட்ச விலை என்பது ரூ.100 என இருக்க வேண்டும் என்ற கொள்கையை இந்திய அரசு நிர்ணயித்தது.

எத்தில் ஆல்கஹால், ஐசோபிரைல் ஆல்கஹால் மற்றும் என் புரோபில் ஆல்கஹால் ஆகியவற்றை உபயோகித்து தரமான சானிடைஸர்களை தயாரிக்க வேண்டும் என்றும் அரசு வழிகாட்டும் நடைமுறைகளை வெளியிட்டது. எனினும், அடுத்த சில வாரங்களில் நொய்டா, ஜம்மு &காஷ்மீர், மும்பை, வதோதரா, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய இடங்களில் போலி சானிடைஸர்கள் தயாரிக்கும் கும்பல்கள் கண்டறியப்பட்டன.

ஒரு சிறிய புலனாய்வு முன்னெடுப்பு ஒரு பெரிய கண்டுபிடிப்புக்கு வழிவகுக்கிறது.

பிரகாசம், கடப்பா மற்றும் சித்தூர் மாவட்டங்களில் மதுபோதைக்கு அடிமையான 50 பேர் போதைவெறியில் சானிடைஸர்களை குடித்து உயிரிழந்திருக்கின்றனர். இந்த இறப்பு குறித்த காரணங்களை போலீஸார் புலனாய்வு செய்தபோது, அந்த காரணங்கள் பெரிய விஷயங்களை வெளிப்படுத்தின. அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற சட்டவிரோத தொழிலையும் அந்த புலனாய்வு வெளிப்படுத்தியது. லிட்டர் ஒன்றுக்கு சராசரியாக 10 முதல் 15 ரூபாய் வரை சந்தையில் மிகவும் மலிவாக எத்தனால் கெமிக்கல் கிடைக்கிறது.

இந்த சட்டவிரோத கும்பல், இதனுடன் இதர கெமிக்கல்களை கலந்து கலப்படப்பொருட்களை தயாரிக்கின்றது. ஐதராபாத்தின் புறநகர் பகுதிகளில் ஒரு சிறுதொழில் போல இப்போது போலி பொருட்கள் தயாரிப்பு வணிகம் வளர்ந்து வருகிறது. தனிநபர் சுத்தத்துக்கான நெறிமுறைகள் என்ற பெயரில், பொதுமக்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதை அடிப்படையாகக் கொண்ட இந்த சட்டவிரோத வணிகம் அவர்களின் சுயலாபத்துக்காக எப்படி வளர்கிறது என்பது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது.

ஒற்றுமை இல்லை

ஒருங்கிணைந்த ஆந்திர உயர் நீதிமன்றம் சில காலத்துக்கு முன்பு, பொது சுகாதார முறைகளைப் பற்றி கவலைப்படாமல் சட்டவிரோத வணிகம் செய்பவர்கள் மற்றும் முறைகேடு செய்பவர்களை தடுப்பதில் அதிகாரிகள் மத்தியில் கடுமையான ஒற்றுமை குறைபாடு நிலவுகிறது என்று கூறியது. சட்டவிரோத வணிகத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டில், உண்மையிலேயே குற்றவாளி யார் என்பதை சுட்டிக்காட்டும் ஆதாரமாக நீதிமன்றத்தின் இந்த விமர்சனம் அமைந்திருக்கிறது. கரோனா பெருந்தொற்று காலகட்டத்திலும் கூட, இது இன்னும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

சானிடைஸர்களில் மெத்தனால் உபயோகிப்பதால், கண்கண் பாதிக்கப்படும் என்றோ, நரம்புகள் வளர்ச்சியைத் தடுக்கும் என்றோ, நீண்டகால வாழ்வியல் நோய்களை உருவாக்கி ஒருவரை மரணத்தில் தள்ளக்கூடும் என்ற எச்சரிக்கைகளையோ ரத்ததாகம் எடுத்தவர்கள் கவனத்தில் கொள்ளமாட்டார்கள். சமூகத்தை நோக்கிய தங்கள் கடமையை செய்யாமல் ஏமாற்றுபவர்களுக்கு அவர்கள் ஆதரவு அளிப்பார்கள்.

முடிவற்ற தியாகங்கள்

சீனா மற்றும் வங்கதேசம் ஆகியவை சதிகாரர்களை ஊக்குவிக்கின்றன. அதே நேரத்தில் இங்கிலாந்து, பிரேசில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகள் உணவு பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்தி கண்காணிப்பதில் முன்னணியில் இருக்கின்றன. நாட்டில் போதுமான பாதுகாப்புக்கான முறையான நடவடிக்கைகளில் குறைபாடு உள்ளதன் காரணமாக, எந்தவித அச்சமும் இன்றி சட்டவிரோத சதிக்கும்பல்கள் தொடர்ந்து தங்கள் வணிகத்தை அதிகரிக்கும் விரும்பதகாத வரத்தைப் பெற்றுள்ளன.

பாலில் கலப்படம் செய்வதால் அதனை குடிக்கும் குழந்தைகளின் வளர்ச்சி என்பது கடுமையாக தடுக்கப்படுகிறது என்பதும், சமையல் எண்ணையில் தீங்கு விளைவிக்கும் பொருட்களை கலப்படம் செய்தல் என்பது கேன்சர் வருவதற்கு காரணமாகவும் மறும் குடலில் அல்சர் ஏற்படும் என்பதும் எல்லோருக்கும் தெரியும். இதுபோன்ற கலப்பட பொருட்கள் மெதுவாக போலியான சானிடைஸர்களில் காணப்படுகின்றன. அவை, அடுத்தகடமாக இதனால் பாதிக்கப்படுவோரின் பலரது உயிரை எடுக்க தயாராகி வருகின்றன.

அதிக அளவுக்கு போலிகள் வடிகட்டப்பட வேண்டும்

அகில இந்திய அளவிலான அதிகார அமைப்பை உருவாக்குவதுடன் மத்திய அரசின் கடமை முடிந்துவிடுகிறது. மாநில அளவில், விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை கடுமையாக அமல்படுத்துவதும் குறிப்பிட்ட செயல்முறையில் குறைபாடு இருக்கிறது. கண்காணிப்புச் சோதனை சாவடிகள் நிலையை முழுவதுமாக சீர் செய்தால்தான் மோசமான கள்ளச் சந்தை மாஃபியாவின் கட்டமைப்பை முழுவதுமாக அழிக்க முடியும். இது சட்டங்கள் மற்றும் நடைமுறைகளை உருவாக்கி கைகளை குலுக்கும் விஷயம் போன்றது அல்ல.

கள அளவில் முறையாக அமல்படுத்தினால் மட்டுமே அவை பலன்தரக்கூடியதாக இருக்கும். திறன்வாய்ந்த ஒருமுறை இருந்தால் மட்டுமே கொடுமைகளை இரக்கமின்றி முடிவுக்கு கொண்டு வரமுடியும். அத்தகைய சக்திகளை தண்டித்தால் மட்டுமே விரைவில் அது மூடப்படும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.