ETV Bharat / bharat

'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஒருநாள் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வரும்!' - காஷ்மீர் இந்தியாவின் கட்டுபாட்டிற்குள் வரும்

டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் பகுதிதான். ஒருநாள் அது இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் வரும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

ஜெய்சங்கர்
author img

By

Published : Sep 18, 2019, 12:28 PM IST

பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து 100 நாட்கள் சமீபத்தில் முடிந்தது. அதன்படி இந்த 100 நாட்களில் மோடி ஆட்சியின் சாதனைகளை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஜெய்சங்கர் விளக்கமளித்துவருகிறார்.

இந்நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்த 100 நாட்களில் தேசப் பாதுகாப்பு இலக்குகளுக்கும் வெளியுறவுக் கொள்கைக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவு மிக நல்லமுறையில் வளர்த்துவருகிறது. இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவு, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.

அதிபர் ஜார்ஜ் புஷ் தொடங்கி தற்போது அதிபர் ட்ரம்ப் வரை அமெரிக்காவுடனான நல்ல உறவில் தொடர்ந்துவருகிறது. அமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் ட்ரம்பும் பங்கேற்க உள்ளதே இரு நாட்டு உறவுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்.

பிரிவு 370, எல்லை தாண்டிய பயங்கரவாதம் போன்ற சில சிக்கல்களும் வெளியுறவுக் கொள்கையில் அதிர்வுகளைக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடும் எப்போதும் மாறாது.

ஒருநாள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும்; மீட்டெடுப்போம், என நம்புகிறோம். காஷ்மீர் விவகாரத்தில் இனி பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே நடக்கும்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.