ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் கடந்த 25ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த புறா ஒன்று பிடிபட்டுள்ளது.
பாகிஸ்தானிலிருந்து உளவுப் பார்க்க அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் இந்த புறாவை ஹிராநகர் செக்டாரில் மன்யாரி கிராம மக்கள் கைப்பற்றியுள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த புறா, ரகசிய தகவல்கள் ஏதேனும் வைத்துள்ளதா என்ற கோணத்தில் உளவுத்துறை ஆய்வு செய்துவருகின்றது.
அந்த புறாவின் காலில் ரகசிய எண்களை பதிந்துள்ள வளையங்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்த விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், பாகிஸ்தானின் பக்கா - சங்கர்கார என்ற கிராமத்தைச் சேர்ந்த நபரான ஹபிபுல்லா என்பவர் இந்த புறாவுக்கு தற்போது உரிமைக் கோரியுள்ளார். இவரது கிராமம் இந்தியாவிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.
புறா வளர்ப்பில் இவருக்கு அதீத பிரியம் உள்ளதாகத் தெரிவித்துள்ள ஹபிபுல்லா, தனது தொலைபேசி எண்ணைத்தான் எழுதி புறாவின் கால்களில் வளையங்களாகப் பதிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு தெரியாமல் நுழைந்துள்ள தனது புறாவை பிரதமர் நரேந்திர உரிய வழிமுறைகளுடன் திருப்பி கொடுக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: ஜி7 உச்சிமாநாட்டை கேம்ப் டேவிட்டில் நடத்தலாம் - ட்ரம்ப்