Kashmir Latest News: இந்திய எல்லைப் பகுதியில் அவ்வப்போது பாகிஸ்தான் பாதுகாப்புப்படையினர் எல்லைதாண்டி தாக்குதல் நடத்துவது வழக்கம். இதுபோன்ற அத்துமீறல்களுக்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதில் இரு நாட்டு வீரர்களும் பலியாவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் பாதுகாப்புப்படையினர் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய பாதுகாப்புப்படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். இதில், இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் இந்தியக் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் பலியாகினர்.
இந்நிலையில் பலியான பாகிஸ்தான் வீரர்களின் உடல்களை அந்நாட்டு பாதுகாப்புப்படையினர் வெள்ளைக் கொடியைக் காட்டியபடி வந்து மீட்டுச் சென்றனர்.
இதுதொடர்பாக காணொலி தற்போது வெளியாகியுள்ளது.