ETV Bharat / bharat

ஊரடங்கு உத்தரவால் ராஜஸ்தானில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் தொழிலாளர்கள்! - ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்: பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தான் வந்து வேலைப் பார்த்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக தாய் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

pakistani-migrants-in-rajasthan-struggle-for-ration-amid-lockdown

author img

By

Published : Apr 24, 2020, 4:33 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேற்று மாநிலங்களில் பணி செய்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதேபோல் விளிம்புநிலை மக்களும், தினக்கூலி தொழிலாளர்களும் அன்றாடம் உணவிற்கே வழியின்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தானிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக ராஜஸ்தான் வந்து வேலை செய்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு, இருப்பிடமின்றி இருக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் பேசுகையில், ''நாங்கள் பாகிஸ்தானிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக வந்தோம். ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு நாளுமே உணவிற்கு கடினமாக உள்ளது. அரசிடமிருந்து இதுவரை எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. அருகிலிருக்கும் மக்கள் எங்களுக்கு சிறுசிறு உதவிகளை செய்கின்றனர்.

இரண்டு நாள்களுக்கு முன்னதாக எங்களுக்கு கொஞ்சம் உணவு கிடைத்தது. இன்று உண்ணுவதற்கு எந்த உணவும் இல்லை. அரசு அத்தியாவசியத் தேவைகளை செய்து கொடுத்தால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்'' எனத் தெரிவித்தனர்.

இதனிடையே ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், பாகிஸ்தான் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தைல காட்டில் தனிமையிலிருந்த காதல் ஜோடி... ட்ரோனை பார்த்து தெறித்து ஓட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.