கடந்த 10 மாதங்களாக, ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தானின் அத்துமீறல் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாப்பூர், கிர்னி, காஸ்பா ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று காலை பத்தரை மணி அளவில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவமும் தக்க பதிலடி அளித்து வருகிறது. இதேபோல் நவம்பர் ஏழாம் தேதி, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து, பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் சிக்கி 24 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு மட்டும், 3 ஆயிரத்து 200 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் சம்பவங்களில் ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் வாழும் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.