ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கத்துவா மாவட்டத்தில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படை போர் விதிகளை மீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்திய பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி தந்துள்ளனர். முன்னதாக, பூஞ்ச் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் எந்த உயிரிழப்பும் நிகழவில்லை என பாதுகாப்பு அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து பாகிஸ்தான் பாதுகாப்புப் படை தொடர்ந்து தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. முக்கியமாக தெற்கு காஷ்மீரில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை கொண்டு வந்ததன் மூலம் அம்மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடிநீர் சேமிப்பும் மத்திய அரசின் நடவடிக்கைகளும்!