ஜம்மு - காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பயங்கரவாத அமைப்பினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தைமீறி, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து, எல்லையோரப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ரஜோரி மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில், எல்லைப் பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் பாட்டின்சாட் கைட் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மறைவு ராணுவ உயர் அலுவலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரின் சடலம் விமானம் மூலம் இம்பாலுக்கு முதலில் கொண்டு செல்லப்படுகிறது. பின்னர், மணிப்பூரில் உள்ள சதர் ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
அங்கு அவரின் இறுதிச்சடங்கு முழு மரியாதையுடன் செய்யப்படும். இந்த கடுமையான சூழ்நிலையில், அவரின் குடும்பத்தினருடன் பி.எஸ்.எஃப் துணை நிற்கும் என எல்லைப் பாதுகாப்பு படைத் தலைவர் தெரிவித்துள்ளார்.