ETV Bharat / bharat

மீண்டும் விதி மீறித் தாக்குதலில் ஈடுபடும் பாகிஸ்தான்!

ஜம்மு-காஷ்மீர்: மாநிலத்தில் உள்ள  எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிகளில்  பாகிஸ்தான் ராணுவம் விதி மீறித் தாக்குதல் நடத்தியுள்ளது.

மீண்டும் விதிமீறி தாக்குதலில் ஈடுபடும் பாகிஸ்தான்!

author img

By

Published : Sep 10, 2020, 6:41 PM IST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் அமைந்துள்ள பூஞ்ச் ​​மாவட்டத்தின் மெந்தர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி, விதி மீறல் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

பாகிஸ்தானின் இந்த விதி மீறல் தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் தேவேந்தர் ஆனந்த் கூறுகையில், "பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறிய ஆயுதங்களுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

அதிகாலை 5.30 மணியளவில் மான்கோட் பகுதியிலும், காலை 11 மணியளவில் டெக்வார் பகுதியிலும், மீண்டும் மதியம் 12.15 மணிக்கு பூஞ்ச் ​​மாவட்டத்தின் மெந்தர் பகுதியிலும், போர் நிறுத்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த எல்லா இடங்களிலும் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது" என்றார்.

ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில், இந்த 2020ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை இரண்டாயிரத்து 730க்கும் அதிகமான விதி மீறல் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதில், பொதுமக்கள் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.