குஜராத் மாநிலம் கட்ச் வளைகுடா கடல் பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் கமாண்டோக்கள் நுழைய வாய்ப்புள்ளதாக குஜராத்தில் உள்ள கடலோரக் காவல்படை பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதானி போர்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் கமாண்டோக்களின் நுழைவு தீவிரவாத தாக்குதலுக்காக கூட இருக்கலாம் என்றும் அதனை தவிர்க்க அனைத்து துறைமுகங்களையும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவருவது கட்டாயம் என்றும் எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் கமாண்டோக்கல் நீருக்கடியில் இருந்து தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.