பாகிஸ்தானின் முன்னாள் குடியரசு தலைவர் ஆசிப் அலி சர்தாரி, பதவி வகித்த காலத்தில் பல்வேறு ஊழல் சம்பவத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இவர் மீது ஏற்கனவே மூன்று வழக்குகள் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
முன்னதாக, பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு கண்காணிப்புக் குழு (என்ஏபி) தாக்கல் செய்த ஊழல் வழக்கில், இஸ்லாமாபாத் நீதிமன்றம் ஆசிப் அலிக்கு கடந்த ஆண்டு பிணை வழங்கியது. தற்போது, உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் ஆசிப், கராச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான 8 மில்லியன் பணத்தை சொந்த செலவுக்காக பயன்படுத்திய குற்றத்திற்காக ஆசிப் அலிக்கு என்.ஏ.பி., கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான பிணை மனு விரைவில் நீதிமன்றத்தில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.