காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து அளித்துவந்த இந்திய அரசியல் சட்டம் 370 மற்றும் 35 ஏவை ரத்து செய்து மத்திய அரசு மசோதாவை நேற்று மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றயது.
இந்நிலையில் இன்று பாகிஸ்தான் நாட்டில் உள்ள இந்திய தூதரை திருப்பி அனுப்புவதாகவும் மேலும் காஷ்மீருடனான வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாகவும் அந்நாட்டு அரசாங்கம் தற்போது தெரிவித்துள்ளது. இதனை சர்வதேச செய்தி நிறுவன முகமை ஏஎஃப்பி உறுதிப்படுத்தியுள்ளது.