ETV Bharat / bharat

தேசிய மாநாட்டு கட்சி கூட்டணியைச் சேர்ந்தவர்களை அரசு மிரட்டுகிறது- உமர் அப்துல்லா குற்றச்சாட்டு

author img

By

Published : Dec 26, 2020, 7:44 PM IST

ஜம்மு- காஷ்மீர் நிர்வாகம் காவல்துறையைப் பயன்படுத்தி ஜம்மு- காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மாநாட்டு கட்சி கூட்டணியைச் சேர்ந்தவர்களை, அப்னி கட்சியில் சேர கட்டாயப்படுத்துவதாக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான உமர் அப்துல்லா குற்றஞ்சாட்டியுள்ளார்.

PAGD councillors being threatened to join Apni Party
தேசிய மாநாட்டு கட்சி கூட்டணியைச் சேர்ந்தவர்களை அரசு மிரட்டுகிறது- உமர் அப்துல்லா குற்றச்சாட்டு

ஜம்மு- காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கும் நிலையில், பிரதமர் மோடி ஜம்மு- காஷ்மீரில் ஜனநாயகம் திரும்பியுள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால், அதனை மறுத்த உமர் அப்துல்லா இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, சோபியன் மாவட்டத்தில் வெற்றிபெற்ற வேட்பாளரை அப்னி கட்சியில் இணைய குதிரை பேரம் பேசப்பட்டதாக கூறிய அவர், அது தொடர்பான ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.

குப்கார் தீர்மானத்திற்கான மக்கள் கூட்டணியில் அங்கம் வகித்து வெற்றி பெற்ற வேட்பாளர்களை, ஜம்மு- காஷ்மீர் அரசாங்கம் காவல்துறையை வைத்து துன்புறுத்துவதாகவும், பாஜகவின் பி-டீமான அப்னி கட்சியில் சேர கட்டாயப்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த ஷபீர் அகமது குல்லே, ஷோகாட் கணாய் ஆகியோர் காரணமே இல்லாமல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அவர்கள் அப்னி கட்சியில் இணைந்தால் விடுதலை செய்வதாக ஜம்மு- காஷ்மீர் அரசாங்கம் பேரம் பேசியதாகவும், ஜம்மு- காஷ்மீரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதாகவும் கூறினார்.

மேலும், ஜம்மு- காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் முடிவுகள், சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை பெரும்பாலான மக்கள் ஏற்கவில்லை என்பதை காட்டுவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'ஜம்மு காஷ்மீரில் அடிமட்டத்திலிருந்து தலைவர்கள் உருவாகிறார்கள்'- அரசியல் நிபுணர் கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.