மத்திய முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் சிக்கி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சார்பாக அவரது குடும்பத்தினர் இந்தி மொழியில் செய்துள்ள ட்வீட்டில், “கடந்தாண்டு வேலை வாய்ப்புகள் குறித்த அறிக்கை வெளியானது. அதன் பாதகமான தகவல்கள் பா.ஜனதா அரசால் மறைக்கப்பட்டது. தற்போது நுகர்வோர் தொடர்பான தகவல்கள் மறுக்கப்படுகின்றன. இதுதான் தகவல்களுக்கான உரிமையா?” என கூறப்பட்டிருந்தது. (அதாவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நசுக்க பார்க்கும் ஆட்சியாளர்களை ப.சிதம்பரம் பதம் பார்த்துள்ளார்)
-
मैंने अपने परिवार को मेरी ओर से ये ट्वीट करने को कहा है-
— P. Chidambaram (@PChidambaram_IN) November 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Mr @AatishTaseer और Mr @aakar_amnesty आप डटे रहो।
धमकी से हार मत मानो, लड़ाई मत छोड़ो।
">मैंने अपने परिवार को मेरी ओर से ये ट्वीट करने को कहा है-
— P. Chidambaram (@PChidambaram_IN) November 17, 2019
Mr @AatishTaseer और Mr @aakar_amnesty आप डटे रहो।
धमकी से हार मत मानो, लड़ाई मत छोड़ो।मैंने अपने परिवार को मेरी ओर से ये ट्वीट करने को कहा है-
— P. Chidambaram (@PChidambaram_IN) November 17, 2019
Mr @AatishTaseer और Mr @aakar_amnesty आप डटे रहो।
धमकी से हार मत मानो, लड़ाई मत छोड़ो।
மற்றொரு ட்வீட்டில், பத்திரிகையாளர்கள் ஆதீஷ் தஸீர் (Aatish Taseer), ஆகர் பட்டேல் (Aakar Patel) ஆகியோருக்கு ஆதரவாக கருத்து பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில், “நீங்கள் மிரட்டலுக்கு அஞ்சி, போராட்டத்தை விட்டுவிட வேண்டாம்” என கூறப்பட்டிருந்தது.
தஸீரின் தந்தை பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். இதனால் அவர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார். பிரதமர் நரேந்திர மோடியை, நாட்டை துண்டாக்க வந்தவர் என்று அமெரிக்க நாளிதழுக்கு கட்டுரை எழுதிய காரணத்தால் தஸீர் குறிவைக்கப்படுகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இவ்வாறான சூழலில் தமிழின் மிகப்பிரபலமான இலக்கணமான வஞ்ச புகழ்ச்சி அணியை இந்தி எழுத்துகளில் பயன்படுத்தி ப.சிதம்பரம் சார்பில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ப. சிதம்பரத்துக்கு பிணை மறுப்பு