டெல்லி: ஓயோ இந்தியா, ஊழியர்கள் சிலரை மே 4ஆம் தேதி முதல் நான்கு மாதங்களுக்கு விடுப்பு எடுத்துக்கொள்ள அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிறுவனத்துக்கு இந்தியாவில் மட்டும் சராசரியாக 10ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். இவ்வேளையில் கவலையளிக்கும் செய்தியாக, மே 4 ஆம் தேதி முதல் நிறுவன ஊழியர்கள் சிலரை சிறு சலுகைகளுடன் விடுப்பெடுத்துக் கொள்ள ஓயோ நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஓயோவின் தெற்காசிய தலைமைச் செயல் அலுவலர் ரோகித் கபூர் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும், அத்தியாவசிய சலுகைகள் எதுவும் ஊழியர்களுக்கு நிறுத்தப்படமாட்டாது என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து வித கடினமான சூழல்களும் மேம்பட்ட பின்னர், ஊழியர்கள் அனைவரும் புதுபொலிவுடன் பணியில் சேரும் நாளை காத்திருப்பதாக நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸூம் ஆப்: வீட்டிலிருந்து வேலை செய்யும் டெக்கிகளுக்கு ரான்சம்வேர் அச்சுறுத்தல்!
அதுமட்டுமல்லாமல், விடுப்பில் போகும் ஊழியர்களின் ஊதியத்தில் 25 விழுக்காடு பிடித்தம் செய்யப்படும் என்றும், இது ஆண்டு வருமானம் ஐந்து லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு பொருந்தாது என்றும் ஓயோ கூறியுள்ளது.