ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் நிறுவனத் தலைவருமான அசாதுதீன் ஓவைசி, கரீம்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
பொதுப் பட்ஜெட்டுக்கு முன்னதாக, பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்படும் வரை அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நான் பாஜகவிடம் கேட்கிறேன்.
அல்வா என்ற சொல் எங்கிருந்து வந்தது? அல்வா என்பது இந்தி அல்லது உருது வார்த்தையோ கிடையாது. அது அரபு வார்த்தையாகும். நீங்கள் (நிர்மலா சீதாராமன்) அல்வாக்கு ஹலோ சொல்வதை பார்த்தேன். ஆக, நீங்கள் தற்போது அரபி ஆகிவிட்டீர்கள். இதில் எந்த தவறும் இல்லை.
ஆனால் நீங்கள் (பாஜக) நகரத்தின் பெயரை மாற்றுவோம் எனக் கூறுகிறீர்கள். இது சரியா? நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், அல்வா எங்கிருந்து வந்தது என்று. நான் இனிப்பான அல்வா அல்ல. காரமான சிவப்பு மிளகாய்.”
இதையும் படிங்க: இந்திய இஸ்லாமியர்கள் என்பதில் பெருமையே! - இம்ரான் கானுக்கு ஓவைசி பதில்