அடுத்த ஐந்தாண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை ஐந்து பில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தப்போவதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அறிவித்தது. இதற்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி செலவிடப்படும் எனவும் மத்திய அரசு சமீபத்தில் உறுதியளித்தது. இதற்காக, மத்திய நிதித் துறைச் செயலாளர் அதானு சக்ரவர்த்தி தலைமையிலான உயர் அலுவலர்கள் குழுவும் அலசி ஆராய்ந்து, 18 மாநிலங்களில் ரூ. 102 லட்சம் கோடி செலவில் பல்வேறு திட்டங்களைத் தயாரித்தது.
இந்தக் குழுவின் பரிந்துரைப்படி, அடிப்படைக் கட்டமைப்புகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி, நிதித் துறை, சமூக நலன் ஆகிய இரு பிரிவுகளிலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முக்கியத்துவம் வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.
இதில், மின்சாரம் மற்றும் எரிசக்தி துறைக்கு 24 விழுக்காடு, சாலை வசதிக்காக 19 விழுக்காடு, நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 16 விழுக்காடு, ரயில்வே துறைக்கு 13 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. மேலும், கிராமப்புற மேம்பாட்டுக்காக 8 விழுக்காடு, சுகாதாரம், கல்வி, குடிநீர் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களுக்கு 3 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், புதிய வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது, அனைத்து மட்டத்தில் உள்ளோரின் வாழ்வாதாரங்களை முன்னேற்றுவதற்காக இந்தத் திட்டத்தில் எதுவும் கூறப்படவில்லை.
மேலும் இத்திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளில் பங்களிப்பு, நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதில் பல சந்தேகங்கள் எழுந்தன. நிதியமைச்சரோ, மத்திய, மாநில அரசுகளின் பங்கு தலா 39 விழுக்காடாகவும் தனியார் துறையினரின் பங்கு 22 விழுக்காடாகவும் இருக்கும் பட்சத்தில் நோக்கம் உன்னதமாக நிறைவேறும் என்று குறிப்பிட்டார். அதன்படி பார்த்தால், மாநிலங்கள் தங்கள் பங்காக ரூ. 40 லட்சம் கோடி சுமையை ஏற்க வேண்டிய நிலைவரும். இது பெரும் நிதி நெருக்கடியிலுள்ள மாநிலங்களுக்குத் தாங்க முடியாத சுமை என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
நிதி நிலைமை மந்தமான நிலையிலுள்ளபோது அதற்கான தீர்வு காணும் இந்த முயற்சிக்கு உண்மையிலேயே எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும்? என்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் எட்டுத் தொழிற்துறைகள், கடந்த 4 மாதங்களாகவே சரிவைச் சந்தித்துவருவதும் கவலையளிப்பதாகவே உள்ளது. இதில் நிலக்கரி, கச்சா எண்ணெய் , இயற்கை எரிவாயு, எஃகு, மின் துறை போன்றவை பெரும் சரிவைச் சந்தித்துவருவதால் அதன் விளைவுகளும் பெரும் பாதகமாக அமைந்துள்ளன. அதேபோல் சிமெண்ட் உற்பத்தியும் கடந்த நவம்பரில் பாதியாகக் குறைந்துள்ளது.
சாலைகள், கப்பல் கட்டும் தளங்கள், மின்சாரம், பாசனத் திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகளுக்கு சிமெண்ட், எஃகு, இரும்பு ஆகியவற்றிப் முக்கியத்துவம் கருதி அத்துறைகளின் கட்டமைப்புகளை ஊக்கப்படுத்த கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டது வரவேற்கத்தக்கதுதான். இந்த விஷயத்தில் அலுவலர்கள் மட்டத்திலும் சரி, மற்றவர்கள் தரப்பிலும் சரி எந்தக் கருத்து மோதலும் ஏற்படவில்லை. கட்டமைப்பு மேம்பாடுகளுக்காக மத்திய அரசு ஐந்தாண்டுகளில் 40 லட்சம் கோடி ரூபாயை செலவிடுவது என்பது, தற்போது வேறு திட்டங்களுக்காக செலவிடுவதை கணக்கிடும்போது பெரிய தொகை கிடையாது என்பதும் மறுப்பதற்கில்லை.
அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுக்காக, 52 லட்சம் கோடி ரூபாய் நிதி தேவைப்பட்டதாக 12ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுத் துறை, தனியார் ஆகியவற்றின் பங்களிப்பு 47 விழுக்காடு என தீபக் பரேக் கமிட்டி 7 வருடங்களுக்கு முன் தனது அறிக்கையில் கூறியிருந்தது. இதேபோல், நிதியுதவி வழங்குவதில் வங்கிகளின் பங்களிப்பும் மிக அவசியமான ஒன்று என வர்த்தக ஆலோசனை அமைப்புகளான அசோசேம் மற்றும் கிரிசில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னரே கூட்டாக வெள்ளை அறிக்கை வெளியிட்டன. ஆனால் வங்கிகளோ, வாராக்கடன் விவகாரத்தில் சிக்கித் தவிக்கின்றன. இதனால் நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாத காலத்தில், தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கிய கடன் என்பது 3.9 விழுக்காடாக குறைந்துவிட்டது.
மேலும் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் போன்ற கடினமான சூழலில், அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்களுக்குத் தடைகள் ஏற்படும் நிலை உருவாகும். இப்படிப்பட்ட தடைகளை எதிர்கொண்டு, இலக்கை எட்டிவிடலாம் என மத்திய அரசு பெரும் நம்பிக்கையுடன் உள்ளது. மின் உற்பத்தி குறைவு, கடன் வசதி மறுப்பு, விவசாய உற்பத்தி பொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்காதது போன்றவையே, நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலைக்கு சரியக் காரணம்.
மேலும், உரிய கொள்கை முடிவுகள் எடுப்பதில் பல்வேறு குளறுபடிகள் நிலவுவது தனியார் முதலீடுகளும் ஏற்றுமதி வர்த்தகமும் சரிவுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இறுதியில், வருவாயை திட்டமிடுதலில் நிலவும் மோசமான நிலையும் மாநிலங்களை மேலும் பாதிப்பதாகவுள்ளது. இதுபோன்று மாநிலங்களில் நிலவும் உண்மை நிலவரங்களைத் தெரிந்துகொள்ளாமல் மத்திய அரசு இந்தக் கட்டமைப்பு நிகழ்வை ஏற்படுத்திவிட முடியாது. பொருளாதாரக் குறியீட்டின்படி இந்தியா தற்போது நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் 143ஆவது இடத்திலிருந்த நிலையில் தற்போது 63ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆனால் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் 163ஆவது இடத்திலும், சொத்துக்கள் பதிவிடுவதில் 154ஆவது இடமும் பிடித்து மோசமான நிலையில் உள்ளது.
இந்த மோசமான நிலைக்கு மத்திய, மாநில அரசுகளின் தவறுகளே காரணம் என மத்திய நிதியமைச்சகத்தின் ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் குற்றஞ்சாட்டுயுள்ளார். இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில், திவாலாகும் நிலையை உருவாக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகளைப் பொருளாதார நிபுணர்களும் நேரடியாகவே கேள்வி எழுப்புகின்றனர். சர்வதேச அளவில், 2019ஆம் ஆண்டுக்கான கட்டமைப்பு குறியீட்டின்படி, விமான நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தியதில் இந்தியாவை விட மலேசியா முன்னேறியுள்ளது.
அதே போல் சீனா, சவுதி அரேபியா, தென் கொரியா உள்ளிட்ட பிற நாடுகளைக் காட்டிலும் இந்திய சாலைகளின் தரம் மோசமான நிலையிலும், அதனை மேம்படுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. அது மட்டுமின்றி, மழைக்காலங்களில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதில் சீனா, சவுதி அரேபியா, ஜெர்மனி போன்ற நாடுகளை விட மிகவும் பின்தங்கியுள்ளதுடன், இதிலும் உரிய புதுமையான நடைமுறைகளை கொண்டுவர வேண்டியுள்ளது.
டென்மார்க், நியூசிலாந்து, சிங்கப்பூர், ஹாங்காக் போன்ற நாடுகள் மனித வள மேம்பாட்டில் முன்னேற்றம் அடைந்துள்ளதால் வெளிநாட்டு முதலீடுகளை எளிதில் ஈர்க்கின்றன. இந்தியாவும், வர்த்தக ரீதியில் முன்னேற்றமடைய, இதுபோன்ற நாடுகளிடமிருந்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும், அது தொடர்பான அனுபவங்கள் குறித்தும் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். எனவே, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்தும் பட்சத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் உற்சாகமடைவதுடன் நமது நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு, வளர்ச்சிப் பாதையில் வீறுநடை போடுவது உறுதி.
இதையும் படிங்க: துரத்திய கொம்பன் - பயத்தில் மரத்தில் ஏறிய வன அலுவலர்!

Intro:Body:
உள்கட்டமைப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காண நிதித்துறைக்கு ஊக்கம் கொடுக்கும் மத்திய அரசு
----------------------------------------
அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை 5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்தப் போவதாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு அறிவித்தது. இதற்கு, தள்ளாட்டத்தில் உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி செலவிடப்படும் எனவும் மத்திய அரசு சமீபத்தில் உறுதியளித்தது.
இதற்காக, மத்திய நிதித்துறை செயலாளர் அதானு சக்ரவர்த்தி தலைமையிலான உயர் அதிகாரிகள் குழுவும் அலசி ஆராய்ந்து, 18 மாநிலங்களில் ரூ.102 லட்சம் கோடி செலவில் பல்வேறு திட்டங்களை தயாரித்தது.
இந்தக் குழுவின் பரிந்துரைப்படி, அடிப்படை கட்டமைப்புகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி, நிதித்துறை மற்றும் சமூக நலன் என இரு பிரிவுகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த முக்கியத்துவம் வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.
இதில்,மின்சாரம் மற்றும் எரிசக்தி துறைக்கு 24 சதவிதம், சாலை வசதிக்காக 19 சதவீதம், நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களுக்கு 16 சதவீதம் மற்றும் ரயில்வேக்கு 13 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது. மேலும், கிராமப்புற மேம்பாட்டுக்காக 8 சதவீதம் மற்றும் சுகாதாரம், கல்வி, குடிநீர் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களுக்கு 3 சதவீதம் ஒதுக்கீடு என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் புதிய வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது மற்றும் அனைத்து மட்டத்திலும் உள்ளோரின் வாழ்வாதாரங்களை முன்னேற்றுவதற்காக இந்த திட்டத்தில் எதுவும் கூறப்படவில்லை.
மேலும் இத்திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளில் பங்களிப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதில் பல சந்தேகங்களும் எழுத்தான் செய்கிறது.
நிதியமைச்சரோ, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் பங்கு தலா 39 சதவீதமாகவும், தனியார் துறையினரின் பங்கு 22 சதவீதமாகவும் இருக்கும் பட்சத்தில் நோக்கம் உன்னதமாக நிறைவேறும் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்படி பார்த்தால், மாநிலங்கள் தங்கள் பங்காக ரூ.40 லட்சம் கோடி சுமையை ஏற்க வேண்டி வரும். இது பெரும் நிதி நெருக்கடியில் உள்ள மாநிலங்களுக்கு தாங்க முடியாத சுமை என்பதிலும் மாற்றுக்கருத்து கிடையாது.
நிதி நிலைமை மந்தமான நிலையில் உள்ள போது அதற்கான தீர்வு காணும் இந்த முயற்சிக்கு உண்மையிலேயே எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும்? என்ற கேள்விகளும் எழத்தான் செய்கிறது.
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் எட்டு தொழிற்துறைகள் கடந்த 4 மாதங்களாகவே சரிவைச் சந்தித்து வருவதும் கவலையளிப்பதாக உள்ளது. இதில் நிலக்கரி, கச்சா எண்ணெய் , இயற்கை எரிவாயு, எஃகு மற்றும் மின் துறை போன்றவை பெரும் சரிவைச் சந்தித்து வருவதால் அதன் விளைவுகளும் பெரும் பாதகமாக அமைந்துள்ளது.அதே போல் சிமெண்ட் உற்பத்தியும் கடந்த நவம்பரில் பாதியாகக் குறைந்துள்ளது.
சாலைகள், கப்பல் கட்டும் தளங்கள், மின்சாரம் மற்றும் பாசனத் திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகளுக்கு சிமெண்ட் மற்றும் எஃகு இரும்பின் முக்கியத்துவம் கருதி அத்துறைகளின் கட்டமைப்புகளை ஊக்கப்படுத்த கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது தான். இந்த விஷயத்தில் அதிகாரிகள் மட்டத்திலும் சரி, மற்றவர்கள் தரப்பிலும் எந்த கருத்து மோதலும் ஏற்படவில்லை.
இப்படி கட்டமைப்பு மேம்பாடுகளுக்காக மத்திய அரசு 5 ஆண்டுகளில் 40 லட்சம் கோடி ரூபாயை செலவிடுவது என்பது, தற்போது வேறு திட்டங்களுக்காக செலவிடுவதை கணக்கிடும் போது பெரிய தொகை கிடையாது என்பதும் மறுப்பதற்கில்லை.
அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக, கடந்த 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் தேவைப்பட்ட நிதி 52 லட்சம் கோடி ரூபாயாகும்.இதில் பொதுத் துறை மற்றும் தனியார் பங்களிப்பு 47 சதவீதம் என தீபக் பரேக் கமிட்டி 7 வருடங்களுக்கு முன் தனது அறிக்கையில் கூறியிருந்தது.
இது போல், நிதியுதவி வழங்குவதில் வங்கிகளின் பங்களிப்பும் மிக அவசியமான ஒன்று என வர்த்தக ஆலோசனை அமைப்புகளான அசோசெம் மற்றும் கிரிசில் ஆகியவை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னரே கூட்டாக வெள்ளை அறிக்கை வெளியிட்டன.
ஆனால் வங்கிகளோ, வாராக்கடன் விவகாரத்தில் சிக்கித் தவிக்கின்றன. இதனால் நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாத காலத்தில், தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கிய கடன் என்பது 3.9 சதவீதமாக குறைந்துவிட்டது.
மேலும் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் போன்ற கடின சூழலில் , அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்களுக்கு தடைகள் ஏற்படும் நிலை உருவாகும். இப்படிப்பட்ட தடைகளை எதிர்கொண்டு, இலக்கை எட்டிவிடலாம் என மத்திய அரசு பெரும் நம்பிக்கையுடன் உள்ளது.
மின் உற்பத்தி குறைவு, கடன் வசதி மறுப்பு, விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காதது போன்றவையே, பனிக்கட்டி உருகுவது போல் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலைக்கு சரியக் காரணம்.
மேலும் உரிய கொள்கை முடிவுகள் எடுப்பதிலும் பல்வேறு குளறுபடிகள் நிலவுவது தனியார் முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் சரிவுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
இறுதியில், வருவாயை திட்டமிடுதலில் நிலவும் மோசமான நிலையும் மாநிலங்களை மேலும் பாதிப்பதாக உள்ளது.
இது போன்று மாநிலங்களில் நிலவும் உண்மை நிலவரங்களை தெரிந்து கொள்ளாமல் மத்திய அரசு இந்த கட்டமைப்பு நிகழ்வை ஏற்படுத்திவிட முடியாது.
பொருளாதாரக் குறியீட்டின்படி இந்தியா தற்போது நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் 143-வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது 63-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆனால் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் 163-வது இடத்திலும், சொத்துக்கள் பதிவிடுவதில் 154-வது இடமும் பிடித்து மோசமான நிலையில் உள்ளது.
இந்த மோசமான நிலைக்கு மத்திய, மாநில அரசுகளின் தவறுகளே காரணம் என மத்திய நிதியமைச்சகத்தின் ஆலோசகர் சஞ்சீவ் சன்யால், காரணம் கண்டுபிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில், திவாலாகும் நிலையை உருவாக்கும் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகளை பொருளாதார நிபுணர்களும் நேரடியாகவே கேள்வி எழுப்புகின்றனர்.
சர்வதேச அளவில், 2019-ம் ஆண்டுக்கான கட்டமைப்பு குறியீட்டின்படி, விமான நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தியதில் இந்தியாவை விட மலேசியா முன்னேறியுள்ளது.
அதே போல் சீனா, சவுதி அரேபியா, தென் கொரியா உள்ளிட்ட பிற நாடுகளைக் காட்டிலும் இந்திய சாலைகளின் தரம் மோசமான நிலையிலும், அதனை மேம்படுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது.
அது மட்டுமின்றி, மழைக்காலங்களில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதில் சீனா, சவுதி அரேபியா, ஜெர்மனி போன்ற நாடுகளை விட மிகவும் பின்தங்கியுள்ளதுடன், இதிலும் உரிய புதுமையான நடைமுறைகளை கொண்டு வர வேண்டியுள்ளது.
இது மட்டுமின்றி, டென்மார்க், நியூசிலாந்து, சிங்கப்பூர், ஹாங்காக் போன்ற நாடுகள் மனித ஆற்றல் சக்தியை வளர்த்துள்ளதால் வெளிநாட்டு முதலீடுகளை எளிதில் ஈர்க்கின்றன.
இந்தியாவும், வர்த்தக ரீதியில் முன்னேற்றமடைய, இது போன்ற நாடுகளிடம் இருந்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும், அது தொடர்பான அனுபவங்கள் குறித்தும் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.
எனவே, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்தும் பட்சத்தும் உள்நாட்டு முதலீட்டாள்கள் உற்சாகமடைவதுடன் நமது நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு, வளர்ச்சிப் பாதையில் வீறு நடை போடுவது உறுதி.
Conclusion: