ETV Bharat / bharat

கரோனாவால் கட்டுமான பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வு; ஆய்வறிக்கை கூறும் தகவல் - புலம்பெயர் தொழிலாளர்கள்

இந்தியாவில் உள்ள முக்கியமான ஏழு மாநிலங்களில் 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்க வேண்டும் என திட்டமிட்டு கட்டப்பட்டு வரும் 4.66 யூனிட் லட்சம் கட்டடங்கள் சரியான நேரத்தில் முடிக்க முடியாது என ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

over-4-dot-6l-homes-likely-to-miss-delivery-deadline-in-2020

author img

By

Published : Jun 23, 2020, 6:19 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் பாதிப்புக்கு உள்ளான தொழில்களில் கட்டுமான தொழில் மிகவும் முக்கியமானது. புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியதையடுத்து, பெரும்பாலான முக்கிய நகரங்களில் கட்டட தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகின.

இத்தொழில் பாதிக்கக் கூடாது என்பதற்காக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில்சேவையைக் குறைக்குமாறு ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள ஏழு முக்கிய நகரங்களில் கட்டப்பட்டு வரும் கட்டடங்களைத் திட்டமிட்டபடி இந்த ஆண்டு இறுதிக்குள் விநியோகம் செய்ய முடியாது என அனராக் ப்ராபர்ட்டி கன்செல்ட்டனட் சார்பாக ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த ஆய்வில், “கரோனா வைரஸ் பாதிப்பு வரவில்லை என்றால் ஏழு மாநிலங்களில் கட்டப்பட்டு வரும் 4.66 யூனிட் கட்டடங்கள் 2020ஆம் ஆண்டிற்குள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும். 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சில கட்டடங்களுக்கான கட்டுமான பணிகள் பலவும், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒப்படைக்கப்படவிருந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக கட்டட வேலைகள் நடக்காததால், கட்டடங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லி (என்சிஆர்) மற்றும் மும்பை (எம்எம்ஆர்) பகுதிகளில் மட்டும் ஒரு லட்சன் யூனிட் கட்டடங்கள் 2020ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. புனேவில் 68 ஆயிரத்து 800 யூனிட் கட்டடங்களும், கொல்கத்தாவில் 33 ஆயிரத்து 850 யூனிட் கட்டடங்களும், ஹைதராபாத்தில் 30 ஆயிரத்து 500 யூனிட் கட்டங்களும், சென்னையில் 24 ஆயிரத்து 650 யூனிட் கட்டடங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்படப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இவையனைத்தும் இன்னும் சில காலம் தள்ளிப்போகும்.

ஆனால் பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் தங்களது கட்டட வேலைகளை முடித்து ஒப்படைக்க கட்டட உரிமையாளர்களிடம் 6 மாத காலம் அவகாசம் நீட்டித்துள்ளனர். இதனால் வீடு வாங்கிய பலரும் இன்னும் அதிகமாக காத்திருக்க வேண்டியுள்ளது.

எந்த வேகத்தில் கட்டட தொழிலாளர்களின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுகிறதோ, அந்த வேகத்தில் கட்டடங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும். இந்தப் பிரச்னைக்கு அரசு செவி சாய்த்து பாதிப்புகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.