கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், வேலையிழந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தமது சொந்த மாநிலங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில், மேற்கு உத்தரப்பிரதேசத்தை அடுத்துள்ள ஷாம்லி மாவட்டத்தில் ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப்பைச் சேர்ந்த 3 ஆயிரத்து 442-க்கும் மேற்பட்ட குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம், அவரவர் சொந்த பகுதிகளுக்குச் செல்ல கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து, அவர்கள் அனைவரும் ஷாம்லி மாவட்ட நிர்வாகம் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்ட 103 பேருந்துகளில் திரும்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
தற்போது, அங்கு 700 தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர் என்றும்; அவர்கள் அனைவரும் விரைவில் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : 'கரோனாவுக்கு எதிரான போர்; முன்னணியில் நிற்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள்'