'தேசிய பல் துலக்குதல்' தினத்தை முன்னிட்டு, நேற்று (நவ., 7) உலகின் மிகப்பெரிய இலவச பழங்குடி மக்களின் கலிங்கா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மொத்தம் 26 ஆயிரத்து 882 மாணவர்கள் ஒரே நேரத்தில் பல் துலக்கி புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். இந்த நிறுவனத்தில் சுமார் 30 ஆயிரம் பூர்வக்குடி ஏழை மாணவர்களுக்கு இலவசமாகக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டுவருகிறது.
வாய் சம்பந்தமான நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வைக் கலிங்கா கல்வி நிறுவனம், இந்திய பொதுச் சுகாதார பல் மருத்துவ சங்கம் (IAPHD), கோல்கேட் பால்மோலிவ் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து நடத்தியுள்ளன. இக்கல்வி நிறுவனம் படைக்கும் நான்காவது கின்னஸ் சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.