கரோனா அச்சுறுத்தல் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விளிம்புநிலை மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவருகின்றனர். அரசாங்கம் உதவினாலும், அந்த உதவி போதுமானதாக இல்லை என்பது அவர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
அதேபோல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அவர்களை அரசாங்கம் மீட்டு சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுவருகிறது. அந்த வகையில், ஹரியானா மாநிலத்தில் சிக்கித் தவித்த 1,500 நபர்கள் மீட்கப்பட்டனர்.
நேற்று 62 பேருந்துகளில் 1,500 நபர்கள் உத்தரப் பிரதேச மாநில எல்லைக்கு அழைத்துவரப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டன என மதுரா மாவட்ட ஆட்சியர் சர்வக்யா ராம் மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பார் எனச் சந்தேகம் எழுந்த நபரை, பதேக்பூரிலிருந்து கர்னல் செல்லும் வழியில் கண்டறிந்தோம். அவரையும் அவரது உதவியாளர்கள் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளோம் எனவும் கூறினார்.