ETV Bharat / bharat

2.3 கோடி குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து தரவில்லை - யுனிசெப் - யுனிசெப் தகவல்

உலகம் முழுவதும் சுமார் 2.3 கோடி குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து, தடுப்பூசி தரப்படவில்லை என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

UNICEF
UNICEF
author img

By

Published : Apr 27, 2020, 7:42 PM IST

உலகில் மொத்தமாக 2.3 கோடி குழந்தைகளுக்கு நோய் தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாக்க பயன்படும் தடுப்பு மருந்துகள் வழங்கப்படவில்லை என ஐக்கியநாடுகள் சபையின் அங்கமான யுனிசெப் அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பாக மிகவும் பின்தங்கிய சுகாதார கட்டமைப்பு கொண்டுள்ள நாடுகளில் தான் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக எச்சரிக்கை அளிக்கும் அறிக்கை தெரிவிக்கிறது.

உலகம் முழுவதும் கரோனா நோய் தொற்று பெருகிவரும் நிலையில் யுனிசெப் அமைப்பு மேற்கண்ட ஆய்வறிக்கையை தயார் செய்துள்ளது. அந்த அறிக்கையின்படி, உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கரோனா தாக்கம் காரணமாக தடுப்பு மருந்து செலுத்தும் பணிகள் தடைப்பட்டுள்ளன. இதன் காரணமாக 2.3 கோடி குழந்தைகளுக்கு அளிக்கப்பட வேண்டிய அவசியமான தட்டம்மை, போலியோ ஆகிய தடுப்பு மருந்துகள் முறையாக வழங்கப்படவில்லை.

உலகின் முன்னணி நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தட்டம்மை பாதிப்பு 2019ஆம் ஆண்டு அதிகளவில் காணப்பட்டது. அப்படியிருக்க பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடுகளில் தடைப்பட்டுள்ள தடுப்பு மருந்து பணிகள் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என யுனிசெப் ஐயம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற அசாதாரண சூழலில்தான், குழந்தைகளை பாதுகாக்கும் தங்களின் பணி மிகவும் அவசியம், என யுனிசெப் அமைப்பின் முதன்மை ஆலோசகர் தெரிவித்துள்ளார். கரோனா பாதிப்புக்குப் பின், பின்தங்கிய நாடுகளில் தடுப்பு மருந்து விநியோகம் வெகுவாக தடைப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இதுவரை எத்தியோபியாவில் 1 கோடி குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படவில்லை. அடுத்தபடியாக காங்கோவில் 62 லட்சம், ஆப்கானிஸ்தானில் 38 லட்சம், மடகாஸ்கர், உகாண்டா ஆகிய நாடுகளில் 27 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படவில்லை.

கரோனா தொற்று பாதிப்பிற்குபின் சுமார் 25 நாடுகள் தடுப்பு மருந்து வழங்கும் பணிகளை நிறுத்தி வைத்துள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'பிரஸ்மீட் என்பது டோட்டல் டைம் வேஸ்ட்' - கடுப்பான ட்ரம்ப்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.