கரோனா வைரஸ் பரிசோதனை நாடு முழுவதும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ஐ.சி.எம்.ஆர் அமைப்பின் மேற்பார்வையில் நாடு முழுவதும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அனைத்து மாநிலங்களும் வரும் மே 3ஆம் தேதி லாக்டவுனுக்குள் பாதிப்பு அதிகமுள்ள ரெட் ஜோன் பகுதிகளில் சோதனையை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளன.
இதன் விளைவாக கடந்த சில நாள்களாக நாளொன்று 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதையடுத்து நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை எண்ணிக்கை 5 லட்சத்து 542 ஆக அதிகரித்துள்ளது.
பரிசோதனையை முடுக்கிவிடும் விதமாக ரேபிட் டெஸ்ட் கருவிகள் சீனாவிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இந்த பரிசோதனை கருவிகள் பல பகுதிகளில் சரியாக இயங்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கருவிகள் தர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் தெரிவிக்கும் வரை அதை மாநில அரசுகள் பயன்படுத்த வேண்டாம் என ஐ.சி.எம்.ஆர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா எதிர்கொள்வதில் 93.6% விழுக்காடு மக்கள் மோடி மீது நம்பிக்கை - ஆய்வு தகவல்