அணு ஆயுத வெடிகுண்டு சோதனை நடந்த பொக்ரானில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தினார்.
பின்னர் பேசிய அவர், வாஜ்பாயின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை பொக்ரானில் அனுசரிப்பது தான் சரியானதாக இருக்கும் என்றும், இது தான் நாம் அவருக்கு செய்ய முடிந்த ஒரு அஞ்சலி எனவும் கூறினார்.
மேலும் பேசிய அவர், இந்தியாவின் அணு ஆயுத கொள்கை என்பது முதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தக் கூடாது என்பது தான், ஆனால் இந்த கொள்கை கூட சூழ்நிலைக்கு ஏற்ப வருங்காலங்களில் மாறலாம் எனவும் தெரிவித்தார்.