மே 23ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் 21 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்திருக்கும் நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இடதுசாரிகள், திருணமுல், காங்கிரஸ், திமுக உட்பட பல கட்சிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டன.