ETV Bharat / bharat

யார் வென்றாலும் அவர்களுடன் நாங்கள் இருக்கிறோம்! - ஜாமியத் உலமா-இ-இஸ்லாம்

பாகிஸ்தானில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இம்ரான் கான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுகின்றன. இவ்விவகாரம் குறித்து டெல்லியிலுள்ள கொள்கை ஆய்வுகளுக்கான சமூக (Society for Policy Studies) இயக்குநர் உதய் பாஸ்கர் அவர்களின் பார்வையிலிருந்து பார்க்கலாம்!

Opinion piece on Azadi March (Pakistan)
author img

By

Published : Nov 10, 2019, 8:39 PM IST

பாகிஸ்தானில் முக்கியமாக மத அரசியல் கட்சியான ஜாமியத் உலமா-இ-இஸ்லாம்மின் (Jamiat Ulema-i-Islam) தலைவர் மௌலானா ஃபஸ்லூர் ரெஹ்மான் (Maulana Fazlur Rehman). இவர் தலைமையில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக கடந்த 27ஆம் தேதி உச்சக்கட்ட போராட்டம் நடந்தது. இஸ்லாமாபாத்தில் இரண்டு லட்சம் பேர் கூடினார்கள். இவர்களின் நோக்கம், கோரிக்கை இரண்டுமே ஒன்றுதான். அது இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்பதே!

இரண்டு வாரங்கள் தொடர்ந்து நடந்த இந்த போராட்டம் கடந்த 9ஆம் தேதியோடு முடிவுக்கு வந்தது. எனினும் முட்டுக்கட்டை தொடர்கிறது. இம்ரான் கான் அரசாங்கம் ரெஹ்பர் கமிட்டியுடன் முடிவில்லாத பேச்சுவார்த்தைகளில் இறங்கியுள்ளது. சீரற்ற வானிலை, பலத்த மழை மற்றும் குளிர்ந்த இரவுகள் என அவதிப்பட்டு பங்கேற்பாளர்கள் வீடு திரும்பியதைக் காண முடிந்தது. உள்ளூர் அரசியல் விமர்சகர்களோ, மௌலானா ஃபஸ்லூர் ரெஹ்மானின் சவால்கள் நிராகரிக்கப்பட்டு தாக்கத்தை ஏற்படுத்தாமல் முடிந்துவிட்டதாகக் கூறுகின்றனர்.

பாகிஸ்தானின் முக்கிய கட்சிகளான முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் (Nawaz Sharif ) பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (Pakistan Muslim League) மற்றும் ஆசிப் சர்தாரியின் (Asif Zardari) பாகிஸ்தான் மக்கள் கட்சி (Pakistan Peoples Party) ஆகியன தற்போது வலிமையாக இல்லை. அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர்.

இதுமட்டுமின்றி ஷெரீப்பின் உடல் நிலையும் சரியாகவில்லை. அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பெற்றுவருகிறார். உயர் சிகிச்சைக்காக வெளிநாடு கூட செல்லலாம். நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் மற்றும் மகளுக்கு இடையே மோதல் போக்கு உள்ளது. இருப்பினும் சரியான நேரத்தில் நவாஸ் ஷெரீப்பின் மகள் மர்யம் கட்சி தலைவர் பொறுப்பை ஏற்பார் என்றும் தெரிகிறது.

பாகிஸ்தான் மக்கள் கட்சியும் சீரற்ற நிலையில் காணப்படுகிறது. மூத்த தலைவர் சர்தாரி நிதிமுறைகேடு புகாரால் கண்காணிக்கப்பட்டுவருகிறார். அவரது உடல் நிலையும் ஒத்துழைக்கும்படி இல்லை. அவரது மகன் பிலாவால் பூட்டோ, அவரது தாயார் பெனாசீர் மற்றும் தாத்தா சுல்பிகர் அலி பூட்டோ ஆகியோரின் அரசியல் வாழ்வும் வீழ்ச்சியடைந்தே காணப்படுகிறது. பாகிஸ்தானும் தற்போது கவனமாக ராணுவத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

இந்தச் சூழலில்தான் இம்ரான் கானுடன் மல்லுக்கட்டுகிறார் ஃபஸ்லூர் ரஹ்மான். இவர் தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு 1980ஆம் ஆண்டிலேயே ஜாமியத் உலமா-இ-இஸ்லாம்மின் (JUI) அமீரக (தலைவராக) நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வெறும் 27 வயதுதான். கைபர் பக்துன்வா (Khyber Pakhtunkhwa (KP)) மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில் கான் மாவட்டம் அவரது கோட்டையாக இருந்தது. இது அவர் தந்தையிடமிருந்து பெற்ற ஒன்று. பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பஷ்டூன் பகுதிகளிலும் ரெஹ்மானுக்கு ஆதரவுள்ள ஒரு தளமாகவே உள்ளது.

ஆனால் இம்ரான் கான் 1996ஆம் ஆண்டுதான் கட்சியை தொடங்கினார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் என்ற அந்த கட்சியை, குறுகிய காலத்தில் அந்நாட்டு மக்களின் நம்பிக்கையை பெறும் கட்சியாக தரம் உயர்த்தினார். 2018ஆம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் ரெஹ்மானும் அவரது கட்சி சகாக்களும் முதல் முறையாக தேர்தலில் தோற்கடிக்கப்பட்டனர். ரெஹ்மானின் உறவினர் ஒருவரும், இம்ரான் கான் கட்சியில் இணைந்து தனது ஆளுமையை வெளிப்படுத்தினார்.

2018 தேசிய அரசியலில் இம்ரான் கானுக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, அவர் முன்னேறிச் சென்றார். அப்போது இம்ரான் கான், யூத மற்றும் இந்தியாவுடன் தொடர்பில் இருப்பதாக ரெஹ்மான் குற்றஞ்சாட்டினார். இம்ரான் கானின் சொந்த வாழ்க்கையை எடுத்துக்கொண்டால், 2016ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக ஒரு மாபெரும் அணிவகுப்பை நிகழ்த்திக்காட்டினார். அப்போது, ரெஹ்மானும் தனது ஆதரவாளர்கள் வழியாக போராட்டத்தை தொடர்ந்தார். அவரால் இஸ்லாமாபாத் அரசாங்கத்தை திணறடிக்க முடிந்தது, ஆனால் பிரதமரை பதவி நீக்கம் செய்ய முடியவில்லை.

பயங்கரவாத குழுக்களை ஆதரிப்பதால், பாகிஸ்தான் தற்போது சர்வதேச ஆய்வுக்கு உட்பட்டுள்ளது. மிக சமீபத்திய நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) ஆய்வொன்றை வெளியிட்டது. பாகிஸ்தானின் மோசமான உருவம், அணு ஆயுத நிர்வாகம் பற்றி கவலையை தெரிவித்திருந்தது. ஆகவே ரெஹ்மான் இஸ்லாமாபாத்தை முற்றுகையிடுவதன் மூலம் இது மேலும் மோசமாகும். ரெஹ்மானின் பேரணி, பாகிஸ்தானின் மூத்த தளபதிகள் மத்தியில் அதிருப்திக்கு வழிவகுத்ததாகவும், சிலர் ஊக்குவித்ததாகவும் செய்திகள் பரவுகின்றன. ஆனால் இது ஊகங்களே (வதந்தி போன்றவை).

அடுத்த சில நாட்களில் ரெஹ்மான் தலைமையிலான அணிவகுப்பு நிறுத்தப்பட்டால் அது அவருக்கு வெற்றியாகவே கருதப்படும். அவரும் தனது நோக்கத்தை அடைந்திருப்பார். பாகிஸ்தானின் அரசியல் மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகியவற்றில் ஒரு முக்கிய சக்தியாக மாறியிருப்பார். ஏனெனில் மற்ற எதிர்க்கட்சிகளும் கடைசி நேரத்தில் இவருடன் கைக்கோர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடும். இது பாகிஸ்தானில் இக்கட்சிக்கு கிடைக்கும் வெற்றியாக கருதப்படும். ஒரு வார்த்தை சொல்வார்கள். “ஜிதான் ஜிடே உத்தே நாள்” ( jiddan jitte udde naal). இதன் அர்த்தம் என்னவென்றால், “யார் வென்றாலும் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம்” என்பதே. இந்த கொள்கையை ரெஹ்மான் உள்வாங்கியதாகவே தெரிகிறது.

இதையும் படிங்க: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மகளுக்கு பிணை...!

Intro:Body:

Opinion piece on Azadi March (Pakistan)

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.