ETV Bharat / bharat

'ஆப்பரேஷன் விஜய்' - கார்கில் பின்னணி கதைக்களம்! - ஜஷ்வந்த் சிங்

காஷ்மீர்: 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் பாதுகாப்புப் படையின் அத்துமீறிய செயலால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற அன்றைய பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தானுக்கு எதிராக போர் அறிவிப்பை பிரகடனம் செய்து 'ஆப்பரேஷன் விஜய்' மூலம் வெற்றிக்கொடி நாட்டிய தினம் இன்று.

vij
author img

By

Published : Jul 26, 2019, 11:50 AM IST

Updated : Jul 31, 2019, 11:34 AM IST

1999 ஜூலை 26ஆம் தேதி இந்தியாவின் வடமேற்கு எல்லையான கார்கில் பகுதிக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பாதுகாப்புப் படையை மூன்றே மாதத்துக்குள் தோற்கடித்து விரட்டியடித்த இந்திய பாதுகாப்புப் படையினர் அங்கு வெற்றிக்கொடி நாட்டினர். இந்திய பாதுகாப்புப் படையின் இந்த தீரச் செயலால், அப்போதைய இந்தியப் பிரதமர் வாஜ்பாய் உலகரங்கில் பெருமிதத்துடன் தலைநிமிர்ந்து நின்றார்.

'ஆப்பரேஷன் விஜய்' என்ற பெயரில் நடைபெற்ற இந்தப் போரின் 20ஆம் ஆண்டு வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

கார்கில் போர் ஏன் உருவானது?

இந்தியா-பாகிஸ்தான் எல்லையின் ஹாட்ஸ்பாட்டாக கருதப்படும் காஷ்மீர் பள்ளத்தாக்கை ஒட்டியுள்ள மலைப்பகுதி 'லைன் ஆஃப் கண்ட்ரோல்' என அழைக்கப்படுகிறது. இந்த சர்ச்சைக்குரிய பகுதிக்குள் பாகிஸ்தான் பாதுகாப்புப் படை அவ்வப்போது ஊடுருவுவதும் அதற்கு இந்திய பாதுகாப்புப் படை தக்க பதிலடி தருவதும் வாடிக்கையாக இருந்துவருகிறது.

1999 மே 3ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கர்கோன் கிராமத்தில் வசித்துவந்த ஆடு மேய்ப்பரான தாஷி நம்காயல், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஆறு பேர் கறுப்பு நிற உடையுடன் இந்திய எல்லைக்குள் ஊடுவுவதை தற்செயலாகக் கவனித்துள்ளார். இந்தத் தகவலை உடனடியாக இந்திய ராணுவத்திடம் தெரிவித்துள்ளார்.

sur
எல்லைப் பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளும் வீரர்கள்

சூழ்ந்த போர் மேகம்

இந்தத் தகவலை அறிந்ததும் 1999 மே 5ஆம் தேதி அதனை கண்காணிக்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கண்காணிப்புப் படை ஒன்றை அனுப்பியது. இந்தப் படையிலிருந்து சவுரப் காலியா என்ற பாதுகாப்புப் படை கேப்டன் காணாமல் போனார். இதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்திய விமானப்படை 'ஐ.எ.எஃப்.எம்.ஐ.ஜி. - 27' ரக விமானத்தைக்கொண்டு அப்பகுதியில் தாக்குதல் நடத்தியது.

இந்த விமானத்தை எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி, விமான ஓட்டியைப் பிணைக் கைதியாக்கினர். அடுத்த சில நாட்களில் இந்திய வீரர்கள் ஆறு பேரின் சிதைக்கப்பட்ட உடலை பாகிஸ்தான் பாதுகாப்புப் படை அனுப்பியது.

தொடங்கியது போர்

பாகிஸ்தான் பாதுகாப்புப் படையின் இந்தச் செயலால் மிதவாதியாக அறியப்படும் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் கோபத்தின் உச்சிக்கே சென்றார்.

vaj
போர் பிரகடனம் செய்த வாஜ்பாய்

இதையடுத்து, சற்றும் தாமதிக்காத மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராகப் போர் அறிவிப்பை பிரகடனம் செய்தது. 'ஆப்பரேஷன் விஜய்' என்ற பெயரில் தரை, வான் வழித் தாக்குதல் என இந்தப் போர் நடைபெற்றது.

beer
பீரங்கி தாக்குதலில் ஈடுபடும் இந்திய ராணுவம்

இந்திய பாதுகாப்புப் படையின் அதிரடி தாக்குதலை பாகிஸ்தான் தாக்குப்பிடிக்கமுடியாமல் திணறியது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறையைச் சேர்ந்த 12 பிரதிநிதிகள் அமைதிப்பேச்சு வார்த்தைக்காக டெல்லி வந்தனர்.

ஊடுருவல் செய்த அனைவரும் திரும்பிச் சென்றால் மட்டுமே இந்தியா போரை நிறுத்தும் என அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கறாராகத் தெரிவித்தார். தொடர் தாக்குதலில் இந்தியா விரைவாக வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டே சென்றது.

இந்தியாவின் வீர, தீரச் செயலைப் பாராட்டிய அன்றைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் பாகிஸ்தான் படைகள் காஷ்மீரிலிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆப்பரேஷன் விஜய் சக்சஸ்!

1999 ஜூலை 4ஆம் தேதி டைகர் ஹில் பகுதி என்ற பகுதியைக் கைப்பற்றி வெற்றியை நெருங்கும் வேலையில் ஒரு வழியாக சரண்டரானது பாகிஸ்தான். அமெரிக்க அதிபர் கிளிண்டனைச் சந்தித்த அன்றைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் தனது படைகளைத் திரும்பப் பெறுகிறது என அறிவித்தார்.

1999 ஜூலை 11ஆம் தேதி முதல் கார்கில் பகுதியிலிருந்து படைகளைத் திரும்பப்பெற ஆரம்பித்தது பாகிஸ்தான். இறுதியாக ஜூலை 26ஆம் தேதி பாகிஸ்தான் படைகள் முற்றிலுமாக நாடு திரும்பிய நிலையில் கார்கில் மலைத்தொடரில் வெற்றிக்கொடியை நாட்டியது 'ஆப்பரேஷன் விஜய்'!

karw
கார்கிலில் உள்ள போர் வீரர்களின் நினைவகம்

அதன்படி, ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் வெற்றி தினமாக அனுசரிக்கப்பட்டுவருகிறது.

Last Updated : Jul 31, 2019, 11:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.