ETV Bharat / bharat

கரோனா: இனி வீட்டிலிருந்தபடி ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை பெறலாம்!

author img

By

Published : May 25, 2020, 10:16 AM IST

ஹைதராபாத்: மருத்துவ ஆலோசனை பெற வசதியாக ஆன்லைன் மென்பொருளை தெலங்கானா அமைச்சர் கே.டி. ராமாராவ் தொடங்கிவைத்தார்.

ஹைதராபாத்தில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை மென்பொருள் தொடக்கம்

மக்கள் வீட்டிலிருந்தபடியே மருத்துவ ஆலோசனைகளைப் பெற நவ்­பு­ளோட்ஸ் நிறு­வ­னம் மென்பொருள் ஒன்றை வடிவமைத்துள்ளது. இந்த மென்பொருளை தெலங்கானா நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.டி. ராமாராவ் அறிமுகப்படுத்தி தொடங்கிவைத்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது, “இந்தியா முழுவதிலும் உள்ள சுகாதார வல்லுநர்கள் திறனுள்ள பயிற்சி ஆலோசனை வழங்க வசதியாக இந்த மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நோயாளிகள் இந்த மென்பொருள் வழியாக மருத்துவ ஆலோசனைகளை உரிய கட்டணம் செலுத்திப் பெற முடியும். ஹைதராபாத்தை மையமாகக் கொண்ட நவ்புளோட்ஸ், இந்தத் தயாரிப்பை வெளியிட்டதில் எனக்கு மகிழ்ச்சி" என்றார்.

மென்பொருளின் சிறப்பு

இந்த ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு தனியாக செயலி தரவிறக்கம் செய்ய வேண்டியதில்லை. மருத்துவரிடமிருந்து வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளுக்கு இணைப்பு வழங்கப்படும்.

அதை இணையதளம் மூலம் அணுகிக் கொள்ளலாம். நோய்களுக்கு ஏற்றாற்போல மருத்து­வர்களை ஆன்லைன் தேடல் மூலம் தேர்வு செய்துகொள்ள முடியும். இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட 1.15 மில்லியன் மருத்துவர்களில் யார் வேண்டுமானாலும் இதனைப் பயன்படுத்தலாம்.

இதுபோன்ற இணையதள காணொலி கிளினிக்கைப் பயன்படுத்தும் மருத்துவர்கள் மாதாந்திர அல்லது வருடாந்திர சந்தா கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

இதையும் படிங்க: மூன்று மாதங்களுக்கான மின் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் - சந்திரபாபு வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.