உலகின் திசைகளை கரோனா பெருந்தொற்று மாற்றியமைத்துள்ளது. ஏழை பணக்காரர் என பாகுபாடு காட்டாமல் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாதங்களாக, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
ஹரியானாவில் கல்வி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகளின் கல்வி, ஆன்லைன் வகுப்புகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது என அரசு தெரிவிக்கிறது. ஆனால், தொலைதூர கிராமங்களில் தொழில்நுட்ப வசதிகள் தோல்வி அடைந்துள்ளன. இந்தியாவின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான நூஹ் மாவட்டமும் அதில் விதிவிலக்கு அல்ல. கரோனா காரணமாக அரசு, தனியார் பள்ளிகள் இயங்கவில்லை.
இதனால் அங்கு முழு அமைதி நிலவிவருகிறது. ஏற்கனவே, கல்வித்துறையில் பின்தங்கிய மாவட்டமாக விளங்கும் நூஹ் மாவட்டத்தில், நிலைமை தற்போது மோசமடைந்துள்ளது.
இதுகுறித்து பெற்றோர் ஃபஜ்ருத்தீன் என்பவர் கூறுகையில், " குழந்தைகளால் படிக்க முடியவில்லை. கிராமப்புறங்களில் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால் குழந்தைகளால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை" என்றார்.
ஆன்லைன் வகுப்புகளை வெற்றிகரமாக மேற்கொள்ள நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக, EduSAT, கேபிள் நெட்வொர்க், வாட்ஸ்அப் போன்ற வசதிகளை மாணவர்களுக்கு நிர்வாகம் வழங்கிவருகிறது.
61 விழுக்காடு மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை மேற்கொண்டுவருவதாக மாவட்ட கல்வி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பெற்றோர் தயா பாரனா என்பவர் கூறுகையில், "பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். தகுந்த இடைவெளி கடைபிடிக்கப்பட்டு குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும். கரோனா ஊரடங்கு காரணமாக குழந்தைகளின் கல்வி பாதிக்காதவாறு இருக்க ஆன்லைன் வகுப்புகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
ஈடிவி பாரத் கள ஆய்வு மேற்கொண்டபோது, அரசு அளித்த தரவுகளுக்கும் உண்மைக்கும் பெரிய வேறுபாடு இருந்தது. மாவட்ட மக்களின் பொருளாதாரம் அந்த சிறப்பக இல்லாதது ஆய்வின் போது தெரியவந்தது. ஏழ்மையின் கராணமாக, அனைவரிடத்திலும் தொலைக்காட்சி, ஸ்மார்ட்போன்கள் வசதிகள் இல்லை. பல வீடுகளில் சாதாரண போன் வசதி கூட இல்லை.
இதுகுறித்து மாணவர் சுந்தர் கூறுகையில், "செல்போனை பயன்படுத்தி படித்துவருகிறேன். பெற்றோர் மற்றும் சகோதரர்கள் சொல்லி தருகிறார்கள்" என்றார்.
இணைய செலவு அதிகமாவதால் ரீசார்ஜ் செய்ய முடியவில்லை என மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்தப் பிரச்னை இத்தோடு முடிவதில்லை. மின்சாரத்தின் தேவை இருப்பதால் பலர் ரீசார்ஜ் செய்ய தயங்குகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் அனுப் சிங் ஜாகத் கூறுகையில், "மாவட்டம் மிகவும் பின்தங்கியுள்ளது. தொலைக்காட்சிகள் குறைவாகவே உள்ளது. இதன்மூலம், 27 விழுக்காடு மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர். 60 விழுக்காட்டிற்கு மேலான மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்கின்றனர்" என்றார்.
நகர்ப்புற மாணவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியும். ஆனால், கிராமப்புற மாணவர்கள் வசதிகள் இன்றி தவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் கல்விக்கு தடையாக இருக்கும் மோசமான இணைய சேவை