பருவமழை அதிகளவில் பெய்துவரும் காரணங்களால் வெங்காயத்தின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெங்காயம் ஒரு கிலோவுக்கு ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், விசாகப்பட்டினம் நகராட்சியில் அமைந்துள்ள ரைது பஜாரில் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.40க்கு மாநில அரசு விற்பனை செய்கிறது.
உணவிற்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் வெங்காயம் ஒரு கிலோவுக்கு ரூ.40க்கு மானிய விலையில் விற்கப்படுவதால், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து ரமேஷ் என்ற நபர் கூறுகையில், "நான் காலை 6 மணி முதல் வரிசையில் நிற்கிறேன். தசரா பண்டிகை நெருங்கிவருகிறது, வெங்காயம் இல்லாமல் எப்படி உணவுகள் சமைக்க முடியும்?” என்று தன்னுடைய வேதனையை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.