இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெய்த கனமழையால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாள்களில் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை 70 லிருந்து 80 ரூபாயாக அதிகரித்துவருகிறது.
இது குறித்து நரேந்திர சிங் தோமர் கூறுகையில், "கடந்த ஒரு மாதமாக உயர்ந்துவரும் வெங்காய விலையை கட்டுக்குள் கொண்டுவர உள்நாட்டு சந்தைகளில் வெங்காய வரத்தை அதிகரிக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.
சில்லறை வர்த்தகத்தில் ஓரிரு நாட்களில் வெங்காயத்தின் விலை படிப்படியாக குறையும். கூட்டுறவு சங்கங்களிலிருந்து அதிகப்படியான வெங்காயங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் அரசு முழு முயற்சியுடன் செயல்பட்டுவருகிறது.
மற்ற பகுதிகளைவிட தலைநகர் டெல்லியில் வெங்காயத்தின் விலை அதிகளவு உயர்ந்துள்ளது. இதில் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாதவகையில் வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க:நீயா... நானா... வா பார்க்கலாம்? - தங்கத்தோடு மோதும் வெங்காயம்...!