Latest National News: மாகாராஷ்ட்ரா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை, வெள்ளம் உள்ளிட்ட காரணங்களால் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துவருகிறது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் வெங்காயம் கிலோ ரூ.70 முதல் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
இதன் காரணமாக சாமானியர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகிவருகின்றனர். இந்நிலையில், வெங்காய விலை ஏற்றத்தைத் தடுக்க வேண்டும் என்று பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் மத்திய அரசை வலியுறுத்திவருகின்றனர்.
இந்நிலையில், வெங்காய விலையைக் கட்டுக்குள் வைக்க மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மறு அறிவிப்பு வரும்வரை வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தடை விதித்து மத்திய தொழில்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.