ETV Bharat / bharat

மோடி 2.0: ஓராண்டு ஆட்சிக் காலத்தில் கண்டதும்... கொண்டதும்... - ராமர் கோயில் கட்டுமானம்

ஹைதராபாத்: நரேந்திர மோடி இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து பிரதமராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இந்த ஆட்சி காலத்தில் அரங்கேறிய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...

Modi 2.0
Modi 2.0
author img

By

Published : May 30, 2020, 9:35 AM IST

இந்திய பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று இன்றுடன் (மே 30) ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஓராண்டு காலகட்டத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

ஆட்சிக்கு வந்த சில மாதத்திலேயே ஜம்மு-காஷ்மீர் பகுதிக்கு கிடைத்த சிறப்பு அந்தஸ்து நீக்கம், முத்தலாக் சட்டத்தில் மாற்றம், குடியுரிமை திருத்தச் சட்டம், யுப்பா சட்டத்தில் மாற்றம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் என பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளபோதும் இந்தியாவின் பொருளாதாரம் சரிவை நேக்கிச் சென்றுவருகிறது.

மேற்கண்ட சில நடவடிக்கைகளுக்கு எதிராக கரோனா லாக்டவுன் அறிவிக்கப்படும்வரை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், மோடி தலைமையிலான மத்திய அரசு ஓராண்டில் மேற்கொண்ட நடவடிக்கைகள், முடிவு குறித்து ஒரு பார்வை.

சட்டப்பிரிவு 370

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி, ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ நீக்கப்பட்டது. மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது. தன்னுடைய நீண்டகால வாக்குறுதியான பாஜக நிறைவேற்றிய நிலையில் இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாத பொருளாக மாறியது.

விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும்

விவசாயிகளின் வருவாயை வரும் 2022ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவோம் என்பது பாஜகவின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். 2016ஆம் ஆண்டு நபார்டு வங்கி இதற்கான செயல்திட்டத்தை வகுத்துகொடுத்துள்ளது. நிதி ஆயோக் இந்த செயல்திட்டத்தை 2017ஆம் ஆண்டு ஆய்வு செய்தது. இந்நிலையில், பிரதமரின் கிசான் திட்டத்தின் மூலம் 8.52 கோடி விவசாயிகளுக்கு சுமார் ரூ. 62,000 கோடி முதல்கட்டமாக வழங்கப்பட்டது.

உலகின் மூற்றாவது பெரிய பொருளாதார கனவு

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்றவும், வரும் 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக முன்னேற்றுவதை லட்சியமாக மோடி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

ஆனால் நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை, நிதி நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் 6.1 விழுக்காட்டிலிருந்து 4.8 விழுக்காடாக குறையும் என சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

உப்பா சட்டத்தில் மாற்றம்

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் எனப்படும் உப்பா சட்டம் கடந்தாண்டு திருத்தப்பட்டது. இந்தச் சட்டத்திருத்தத்தின் படி குற்றம்சாட்டப்படும் நபரை பயங்கரவாதியாக அறிவித்து, அவர்களின் சொத்துக்களை முடக்கும் அதிகாரம் அரசுக்கு உண்டு. இந்த சட்டத்திருத்தம் சர்வாதிகாரமான போக்கைக் கொண்டது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

முத்தலாக் சட்டம்

இஸ்லாமிய பெண்களின் உரிமையை பாதுகாக்கும் விதமாக முத்தாலக் கிரிமினல் குற்றமாக சட்டமாக்கப்பட்டது. பாஜக நீண்டகாலமாகவே இந்தச் சட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்துவந்த நிலையில், இஸ்லாமிய தனிநபர் சட்டத்தை சீண்டுவதாக சர்ச்சையும் கிளம்பியது. இதன் நீட்சியாக பொதுச் சிவல் சட்டம் கொண்டுவரப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ராமர் கோயில்

பாஜகவின் நெடுங்காலக் கனவான அயோத்தியில் ராமர் கோயில் தற்போது நனவாகிவருகிறது. நீண்டகாலமாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, கோயிலுக்கு கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்திற்காக அறங்காவல் குழு ஒன்றும் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மாற்றம்

சர்ச்சைக்குரிய தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில் பெரும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத் திருத்தம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையையே கேள்விக்குறியாக்கும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

ஜல் ஜீவன் திட்டம்

நாடு முழுவதும் ஜல் ஜீவன் திட்டம் உருவாக்கப்பட்டு, வரும் 2024ஆம் ஆண்டுக்குள் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் விநியோகம் உறுதிப்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜல்சக்தி என தனி அமைச்சகத்தை மத்திய அரசு அமைத்துள்ளது.

தற்சார்பு இந்தியா திட்டம்

கரோனாவால் இந்தியா பெரும் பொருளாதார பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், இதை மீட்டெடுக்கும் விதமாக தற்சார்பு இந்தியா என்ற திட்டத்தின் பேரில் ரூ. 20 லட்சம் கோடிக்கு சிறப்பு நிதிச் சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: காண்போரை கவர்ந்திழுக்கும் காஷ்மீர் பாதாம் தோட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.