உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் தொடக்கத்திலிருந்தே நோயாளிகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்துவந்தது.
புதுச்சேரி அரசின் இந்திரா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நான்கு நோயாளிகளில் ஒருவரான முதியவர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
மூலக்குளம் அன்னை தெரசா நகரைச் சேர்ந்த அந்த முதியவர் வீடு திரும்பியதைத் தொடர்ந்து தற்போது மூன்று பேர் மட்டுமே கரோனாவால் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை ரேபிட் டெஸ்ட் எதுவும் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க... புதுச்சேரியில் இன்னும் ஒரு சில நாள்களில் புத்தகக் கடை, துணிக் கடை!