ETV Bharat / bharat

கேரள தங்கம் கடத்தல் விவகாரம்: மேலும் ஒருவர் கைது - தங்கம் கடத்தல்

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தின் பெயரில் போலியான ஆவணங்கள் தயார் செய்து, தங்க கடத்தலில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.

கேரள தங்கம் கடத்தல் விவகாரம்: மேலும் ஒருவர் கைது

author img

By

Published : Jul 22, 2020, 4:49 PM IST

கேரள மாநிலத்தில் உள்ள ஐக்கிய அமீரகத் தூதரகத்தின் பெயரில் போலியான ஆவணவங்களை தயார் செய்து, தங்க கடத்தலில் ஈடுபட்ட, சரித் , ஸ்வப்னா சுரேஷ், மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை ஜுலை ஐந்தாம் தேதி சுங்கத் துறை அலுவலர்கள் கைது செய்தனர். இந்த வழக்கை தற்போது, தேசிய புலனாய்வு முகமை அலுவலர்களால் விசாரிக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில், இந்த தங்கக்கடத்தல் விவகாரத்தில், தொடர்பு இருப்பதாக கூறி தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர். கடத்தப்பட்ட தங்கத்தை வாங்குவதற்காக பணம் கொடுத்துள்ளதாக கூறி, கேரளாவின் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி நகரைச் சேர்ந்த ஹம்சாத் அப்து சலாம் என்பவரை, சுங்கத் துறை அலுவலர்கள் கைது செய்தனர். அவர் இன்று கொச்சியில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்ட விசாரணையில், கரோனாவால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை பயன்படுத்தி, எவ்வாறு இவர்கள் வெளிநாட்டிலிருந்து அதிகளவிலான தங்கத்தை கடத்திவந்தார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், தங்க கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சந்தீப் நாயர் விசாரணையின்போது, தாங்கள் எவ்வாறு கரோனா நெருக்கடியை பயன்படுத்தி கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டனர் என்பதை தெரிவித்தார்.

கடத்தல் சம்பவம் குறித்து சதி திட்டம் தீட்டிய இடம் குறித்தும், அவர்கள் சரக்கு பெற்ற இடங்கள் மற்றும் சட்டவிரோத வருமானம் குறித்தும் வெளிப்படுத்தியுள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் சந்திப்பு காட்சிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒரு டி.வி.ஆரும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சரித், சந்தீப் ஆகியோருடனும் மற்ற கூட்டாளி நபர்களுடனும் தனக்குள்ள தொடர்பு குறித்து ஸ்வப்னா வெளிப்படுத்தியிருந்தார். திருவனந்தபுரத்தின் வெவ்வேறு இடங்களில் சரித் மற்றும் சந்தீப் மற்றும் பிறருடன், கடத்தல் தொடர்பாக சதித்திட்டம் செய்தது குறித்தும் அவர் வெளிப்படுத்தினார்” என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.