ETV Bharat / bharat

ஸ்ரீசைலம் மின்நிலைய தீ விபத்தில் 9 பேர் பலி - Telengana CM Chandrasekar Rao srisailam

ஹைதரபாத் : ஸ்ரீசைலம் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்.

Srisailam
Srisailam
author img

By

Published : Aug 21, 2020, 4:48 PM IST

Updated : Aug 21, 2020, 5:36 PM IST

தெலங்கானா மாநிலம், ஸ்ரீசைலத்தில் அரசு மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், இன்று (ஆக. 21) நள்ளிரவு, இம்மின் நிலையத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தில் மின் நிலையத்தின் உள்ளே சிக்கியிருந்த ஒன்பது பேர் இதுவரை பலியாகியுள்ளனர். ஆறு பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள மூன்று பேரின் உடல்களை மீட்கும் பணியில் சி.ஐ.எஸ்.எஃப்.(CISF) படையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஸ்ரீசைலம் செல்வதாக இருந்த நிலையில், தற்போது அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் பேஸ்புக் விவகாரம் : சசி தரூருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்

Last Updated : Aug 21, 2020, 5:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.