ETV Bharat / bharat

கரோனா பாதித்த தாயுடன் 17 நாள்: பெருந்தொற்றை வென்ற ஒன்றரை வயது குழந்தை - one and half year boy created miracle in chittor district

கரோனா பாதித்த தாயிடம் 17 நாள்கள் தங்கியிருந்தும் அவரது ஒன்றரை வயது குழந்தைக்கு கரோனா தொற்று ஏற்படாதது மருத்துவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

chittor district
chittor district
author img

By

Published : Apr 26, 2020, 3:34 PM IST

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் டெல்லி சமய மாநாட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது அவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது.

பின்னர் அவரது குடும்பத்தில் உள்ளவர்களைச் சோதனை செய்தபோது அவரது வீட்டுப் பெண்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களைத் தனிமைப்படுத்தி மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். அதில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணின் குழந்தையை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால் தாயிடமே குழந்தை இருந்தது.

சித்தூர் மருத்துவமனை

தாயிடம் குழந்தை 17 நாள்கள் தங்கி இருந்தது. அவ்வப்போது மருத்துவர்கள் தாயையும், குழந்தையும் சோதனை செய்துவந்தனர். இதனையடுத்து தாயிடமிருந்து கரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் குழந்தை இருந்துவந்துள்ளது.

கரோனா பாதித்த தாயிடம் இரண்டு வாரங்களுக்கு மேல் இருந்தும் குழந்தைக்கு கரோனா பரவவில்லை என்பது மருத்துவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்கு இந்தத் தகவலை எடுத்துச் செல்வதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஒன்றரை வயது குழந்தைக்கு கரோனாவை எதிர்கொள்ளக்கூடிய நோய் எதிர்ப்புச் சக்தி இருப்பது மருத்துவர்கள் மத்தியில் வியப்பாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:திருச்சியில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட ஒரு வயது குழந்தை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.