ETV Bharat / bharat

அமெரிக்க உயிரியல் பூங்காவில் குட்டி ஈன்ற விசித்திர விலங்கு! - அரியவகை விலங்கான 'ஆயே ஆயே' குட்டியை ஈன்றது

வாஷிங்டன்: அமெரிக்கா உயிரியல் பூங்காவில் உள்ள 'ஆயே ஆயே' என்ற விசித்திர விலங்கு குட்டி ஒன்றை ஈன்றுள்ளது.

aye-aye
author img

By

Published : Oct 19, 2019, 11:03 PM IST

வட கரோலினாவில் உள்ள டியூக் லெமூர் மையத்தில் (டி.எல்.சி.) ஆயே ஆயே என்ற அரியவகையைச் சேர்ந்த உயிரினம் பராமரிக்கப்பட்டுவருகிறது. இதன் தோற்றம் பார்ப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் இருப்பதால் இந்த உயிரினம் தீமையின் (evil) சகுனம் என்று அழைக்கப்படுகிறது. ஆயே-ஆயே விசித்திரமான உணவுப் பழக்கத்தைக் கொண்டிருக்கிறது.

ஆயே ஆயே உயிரினம்
ஆயே ஆயே உயிரினம்

இவை சிறு, சிறு பூச்சிகள், புழுக்களை உணவாகக் உட்கொள்ளும். சிறிய பொந்துகள், மரங்களில் உள்ள சிறிய துளைகளில் பதுங்கியிருக்கும் பூச்சிகளைத் தேடி உண்ணும். இவை இரவு நேரங்களில் மட்டும் வேட்டையாடும் திறன் கொண்டவை. இதன் விரல்கள் மிகவும் நீளமாக பார்ப்பதற்கே கொடூரமாகக் காட்சியளிக்கும்.

ஆயே ஆயே ஈன்ற குட்டி
ஆயே ஆயே ஈன்ற குட்டி

நரி போன்ற முகம் கொண்ட இந்த ஆயே ஆயே விசித்திர விலங்கு நேற்று டியூக் லெமூர் மையத்தில் ஒரு குட்டியை ஈன்றுள்ளது. மடகாஸ்கர் தீவை பூர்விகமாகக் கொண்ட இந்த ஆயே ஆயே உயிரினம் அழிந்துவிட்டதாக உலக வனவிலங்கு நிதி அமைப்பு கூறியது. இதையடுத்து பல்வேறு ஆய்வுக்குப் பின் 1961இல் மீண்டும் இந்த உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டது. சாதுவான இந்த உயிரினம் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது வேதனையான விஷயம்!

இதையும் படிங்க: விலங்குகளிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்கு தடை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.