ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி குழந்தைகள் பயன்படுத்தும் பாட புத்தகங்கள் வைப்பதற்கான பை விற்பவரான லக்ஷ்மண் நாயக் என்பரின் மகன் சுப்ரன்ஷு நாயக். இவர் அங்குல் மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவருகிறார்.
இவர் சில நாட்களுக்கு முன்னதாக மேவிக் என்ற திட்டத்தை உருவாக்கினார். அந்த மேவிக் தொழில்நுட்பத்தின் மூலம் மருத்துவ வசதி பெற முடியாத இடங்களில் இருக்கும் மக்கள், கேமரா மூலமாக மருத்துவரின் ஆலோசனைகளைப் பெறலாம்.
இதற்கு ரூ.65 ஆயிரம் வரை செலவாகியுள்ளது. இத்திட்டத்தை உருவாக்கிய பின், நாசாவின் ஸ்பேஸ் செட்டில்மெண்ட் தளத்தில் (Nasa Space Settlement Website) அவர் அதனை பதிவேற்றம் செய்தார்.
இதனை ஆய்வு செய்த நாசா நிர்வாகம், வரும் டிசம்பர் 1ஆம் தேதி வாஷிங்டனில் இந்தத் திட்டம் குறித்து விரிவான பார்வையையும், விளக்கத்தையும் அளிக்குமாறு சுப்ரன்ஷு நாயக்கிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் 138 பேர் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் இந்தியாவிலிருந்து இரண்டு பேர் பங்கேற்க இருக்கின்றனர். இதனால் மாணவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: தேனியில் ஆழ்துளைக் கிணறுகளை, மழைநீர் சேகரிப்பு கிணறுகளாக மாற்றும் திட்டம்!