இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரசால் இதுவரை 18,601 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 590 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் அயராது உழைத்துவருகின்றனர்.
இருப்பினும் நாட்டில் ஆங்காங்கே மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இந்நிலையில், ஒடிசாவில் கரோனா தடுப்புப் பணியின்போது உயிரிழக்கும் சுகாதாரப் பணியாளர்கள் குடும்படுத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
"ஒடிசா மாநில அரசு சுகாதாரப் பணியாளர்களை ராணுவ வீரர்களைப் போல் தக்க மரியாதை அளித்து கவனித்துக்கொள்ளும். அரசுப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் என அனைத்துத் தரப்பு சுகாதாரப் பணியாளர்களுக்கும் இந்த நிவாரணத் தொகை வழங்கப்படும்.
இந்த இக்கட்டான நிலையில் தன்னலமற்று உழைக்கும் மருத்துவப் பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் ஆகியோர் மீது மக்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒரேவேளை அவர்களுக்கு எதிராக மக்கள் எந்தவொரு செயலிலும் ஈடுபட்டால் அது அரசாங்கத்திற்கு எதிராக நடத்தக்கூடிய செயலாகும். அவ்வாறு ஈடுபடுவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இந்தியாவில் கேரளா, ஒடிசா ஆகிய இரு மாநிலங்களில்தான் கரோனா வைரஸ் பரவல் கணிசமாகக் குறைந்துள்ளது. கேரளாவில் 108 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஒடிசாவில் 74 பேர் பாதிக்கப்பட்டும் ஒருவர் உயிரிழந்தும் உள்ளனர்.
இதையும் படிங்க: புனேவில் 25 மருத்துவ பணியாளர்களுக்கு கரோனா!