இது தொடர்பாக ஒடிசா மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின் படி, கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 77 வயது முதியவருக்கு ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக பிரச்னை இருந்தது. அதனால் நேற்று நள்ளிரவு புபனேஷ்வரில் உள்ள கிம்ஸ் கரோனா மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி 72 வயது முதியவர் ஒருவர் இத்தொற்றால் புபனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால், மாநிலத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.
அதேசமயம், குஜாராத் மாநிலம் சூரத்திலிருந்து ஒடிசாவிற்கு வந்த 18 வயது இளைஞர் ஒருவருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 177ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி இதுவரை மாநிலத்தில் 60 பேர் கரோனா வைரசிலிருந்து முழுவதுமாக குணமடைந்துள்ளனர். அதனடிப்படையில் தற்போது 115 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 20 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை-மகனை இணைத்த ஊரடங்கு