ஒடிஸா மாநிலம் பெர்ஹாம்பூர் பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி இஷ்ஹிதா ஆச்சாரி. கோவிட் - 19 ஊரடங்கு காரணமாக விடுப்பில் உள்ள அவர், லாக்டவுன் காலத்தில் ராமாயணம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துள்ளார்.
இதையடுத்து, தான் பார்த்த இந்த தொடரை கதையாக எழுத வேண்டும் என்ற ஆர்வம் இஷ்ஹிதாவின் மனதில் எழுந்தது. இவருக்கு அவரது பெற்றோரும் தொடர்ந்து ஊக்கமளிக்கவே, தொடர்ச்சியாக 22 நாட்கள் ராமாயண கதையை புத்தக வடிவில் எழுதி முடித்துள்ளார்.
பெற்றோரின் தொடர் ஊக்கத்தின் காரணமாகவே இந்த புத்தகத்தை தன்னால் எழுத முடிந்தது எனவும், 57 பக்கங்களில் ராமாயணத்தை எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
![இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/od-bam-records-holder-to-youngest-writer-of-ramayana-spl-pkg-7205524_29072020003135_2907f_1595962895_380.jpg)
குறுகிய காலத்தில் ராமாயணம் எழுதிய இளம் சிறுமி என்ற பெருமையுடன் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-இல் இஷ்ஹிதா இடம்பிடித்துள்ளார்.
இதையும் படிங்க: மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் மரணம்; ராகுல் காந்தி அஞ்சலி