ஒடிசா மாநிலத்தில் புகழ் பெற்ற புரி ஜெகன்நாதர் கோயில் ரதத்திருவிழா, கோலாகலமாக இன்று தொடங்கியது. ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் இந்த ரதத் திருவிழாவில், நாடு முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஆசிர்வாதம் பெறுவார்கள்.
தேர்கள்:
ரதத்திருவிழாவில் 16 சக்கரங்களைக் கொண்ட மஞ்சள் மற்றும் சிவப்பு நிற ரதத்தில் உற்சவ மூர்த்தியான புரி ஜெகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு மற்றும் பச்சை நிறமுடைய ரதத்தில் பாலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட கறுப்பு மற்றும் சிவப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் காட்சியளிப்பர்.
தேர்கள் செல்லும் வழிமுறை:
தேரோடும் வீதியை தங்கத்தால் செய்யப்பட்ட துடைபதைக் கொண்டு புரி மன்னர் கஜபதி பெருக்கி சுத்தம் செய்வது வழக்கம். அதன் பின்பு முதலில் பாலபத்திர ரதத்தேரும், அதை தொடர்ந்து சுபத்ரா தேவியின் தேர்கள் புறப்பட்ட பின்பே இறுதியாக புரி ஜெகன்நாதர் தேர் புறப்படும். குண்டிச்சா கோயிலை நோக்கிச் செல்லும் இந்த யாத்திரை, அங்கிருந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு புரி ஜெகன்நாதர் கோயிலுக்கே வந்தடையும்.