ஒடிசாவின் பேரம்பூரைச் சேர்ந்தவர் பிப்லப் குமார். மருந்துகடையில் வேலை செய்யும் இவர், அனிதா என்பவரை மதச்சடங்குகளை தவிர்த்து அரசியலமைப்பில் உறுதி ஏற்று திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு ரத்த தான முகாமையும் அவர்கள் நடத்தினர்.
இது குறித்து பிப்லப் குமார், அனைவரும் வரதட்சணையை தவிர்க்க வேண்டும். எளிமையான முறையில் பட்டாசு, ஒலிபெருக்கி இன்று திருமணத்தை செய்து கொள்ள வேண்டும். அனைவரும் ரத்த தானம் செய்ய கோரிக்கைவிடுக்கிறேன் எனத் தெரிவித்தார்.
பின்னர் அனிதா, ரத்த தான முகாமை நடத்தி என் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளேன். இதில், விதவைகள் பங்கேற்றனர். மற்றவர்கள் இதுபோன்ற திருமணங்களை செய்துகொள்ள முன்வர வேண்டும் எனக் கூறினார்.