2020ஆம் ஆண்டை செவிலியரின் ஆண்டாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து செவிலியரின் முக்கியத்துவம் குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் புதுச்சேரியில் நடைபெற்ற செவிலியர் பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இன்றைய காலகட்டத்தில் செவிலியர்களின் பங்கு அத்தியாவசியமான ஒன்றாகவுள்ளது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் நவீன நர்சிங் முறையை உருவாக்கித் தந்த புளோரன்ஸ் நைட்டிங்கேலின் நூறாவது பிறந்த நாளில், "2020ஆம் ஆண்டை செவிலியர் ஆண்டாக" கொண்டாட வேண்டுமென அறிவித்துள்ளது. இதைக் கடைப்பிடிக்கும் வகையில் புதுச்சேரியிலுள்ள அனைத்து செவிலியர் கல்லூரிகள், தமிழ்நாடு செவிலியர் - தாதியர் குழுமமும் இணைந்து மாபெரும் பேரணியை நடத்தியது.
புதுச்சேரி கம்பன் கலையரங்கிலிருந்து தொடங்கிய இப்பேரணியைப் புதுச்சேரி காவல்துறை துணை ஆய்வாளர் சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியில் புதுச்சேரியில் உள்ள அனைத்து செவிலியர் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு, செவிலியர்களின் சேவைுடன் அவர்வளின் பங்கு குறித்த பதாகைகளை ஏந்தி, முழக்கமிட்டபடி பேரணி சென்றனர்.
முக்கிய வீதிகளின் வழியாக சென்ற இந்தப் பேரணி இறுதியாக காந்தி சிலை அருகே நிறைவுபெற்றது.
இதையும் படிங்க: 'பெண் ஊழியர்கள் என்பதால் கூடுதல் பணி திணிப்பு நிகழ்கிறது'