நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
பிகார் சட்டப்பேரவையின் செயல் தலைவர் அவதேஷ் நாராயண் சிங்கிற்கு கரோனா ரைவஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர், கடந்த ஒன்றாம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அரசு அலுவலகக் கூடத்தில் பங்கேற்றிருந்தார்.
இதனைக் கருத்தில் கொண்டு, கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் முதலமைச்சர் அலுவலக ஊழியர்கள் 15 பேருக்கும், கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், அலுவலக ஊழியர் ஒருவருக்கு மட்டுமே வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பிகார் மாநிலத்தில், இதுவரை 10 ஆயிரத்து 954 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், எட்டாயிரத்து 214 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.