இந்தியாவின் மிகப்பெரும் அரசு வங்கியான எஸ்பிஐ, அதன் யூனோ (செயலி/இணையதளம்) மூலம் தன் வாடிக்கையாளர்களுக்கு வெறும் 45 நிமிடங்களில் ரூ. ஐந்து லட்சம் வரை அவசரக் கடன் வழங்கி வருவதாகச் செய்தித்தாள்களில் செய்தி வெளியாயின.
இந்நிலையில் இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், "யூனோ மூலம் எஸ்பிஐ வங்கி அவசரக் கடன் வழங்கி வருவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த செய்திகளில் சொல்லப்படுவதைப்போன்று எஸ்பிஐ வங்கி, எந்தக் கடனையும் வழங்கவில்லை என இங்கு தெளிவுபடுத்திக்கொள்கிறோம். இதுபோன்ற வதந்திகளை வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு யூனோ மூலம் தனிக்கடன் (Personal Loan) வழங்குவது குறித்து முயற்சியில் எஸ்பிஐ இறங்கியுள்ளது " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அறிகுறியின்றி டெல்லியில் பரவும் கரோனா - கெஜ்ரிவால்