ETV Bharat / bharat

இந்திய - சீன மோதல்: எல்லை பிரச்னைக்கு அப்பாற்பட்டது - இந்திய - சீன மோதல்

இந்தியா தனது எண்ணெய் தேவைகளில் 82 விழுக்காட்டிற்கும் அதிகமானவற்றை இறக்குமதி செய்யும் அதே வேளையில், 2022ஆம் ஆண்டில் உள்ளூர் ஆய்வு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்நாட்டு எத்தனால் எரிபொருளின் பயன்பாடு ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம் அதை 67 விழுக்காடாகக் குறைக்கும் முயற்சி நடந்து வருகிறது. மறுபுறம், சீனா அதன் மொத்த எண்ணெய் தேவையில் 77 விழுக்காட்டை இறக்குமதி செய்கிறது.

இந்திய - சீன மோதல்
இந்திய - சீன மோதல்
author img

By

Published : Jul 30, 2020, 4:06 PM IST

கிழக்கு லடாக்கில் வளர்ந்து வரும் இரண்டு ஆசிய ஜாம்பவான்களான இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்து வரும் இராணுவ மோதல்கள் முற்றிலும் வரலாற்று மரபு, பிரதேசம் அல்லது புவி-அரசியல் முக்கியத்துவத்தின் பிரசினைகள் பற்றியதாக மட்டும் இருக்காது. அதன் கிழக்கு பகுதி உள்பட இப்பகுதி எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட பரந்த ஹைட்ரோகார்பன் இருப்புக்களின் களஞ்சியமாக இருக்கலாம்.

புல் கூட வளர முடியாத இடம் என கிழக்கு லடாக்கின் அக்சாய் சின் பிராந்தியத்தை இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறிப்பிடுகிறார். ஆனால், குளிர்ந்த பாலைவன பகுதியாக விளங்கும் அங்கு ஹைட்ரோகார்பன் இருப்பதாக தற்போது ஆற்வில் கூறப்படுகின்றன.

பெட்ரோல் மற்றும் டீசல் பொருள்கள் மற்ற நாடுகளிலிருந்து மிகப்பெரிய அளவில் இறக்குமதி செய்யும், எரிசக்தி வளம் குறைவாக உள்ள இந்தியா மற்றும் சீனாவைப் பொறுத்தவரை, கணிக்கப்பட்ட இருப்புக்கள் எதிர்கால எரிசக்தி பாதுகாப்பிற்கான முக்கியத்துவத்தை கொண்டிருக்கக்கூடும்.

இந்தியா தனது எண்ணெய் தேவைகளில் 82 விழுக்காட்டிற்கும் அதிகமானவற்றை இறக்குமதி செய்யும் அதே வேளையில், 2022ஆம் ஆண்டில் உள்ளூர் ஆய்வு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்நாட்டு எத்தனால் எரிபொருளின் பயன்பாடு ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம் அதை 67 விழுக்காடாகக் குறைக்கும் முயற்சி நடந்து வருகிறது. மறுபுறம், சீனா அதன் மொத்த எண்ணெய் தேவையில் 77 விழுக்காட்டை இறக்குமதி செய்கிறது.

இந்த விஷயத்தைப் பற்றி நன்கு அறிந்த ஒரு மூத்த ஓஎன்ஜிசி அலுவலர் ஈடிவி பாரத்திடம் பேசுகையில், “லடாக் பிராந்தியத்தின் திறனை நீண்ட காலமாக நாங்கள் அறிந்திருந்தோம், அங்கு ஹைட்ரோகார்பன் இருப்புகள் அதிகமாக உள்ளது. ஏனென்றால், இப்பகுதியின் பெரும்பகுதி டெதிஸ் கடலின் கடல் தளமாக இருந்தது, இது மில்லியன் கணக்கான ஆண்டுகளில் டெக்டோனிக் தட்டு சக்திகளால் மேற்கு மற்றும் மத்திய இமயமலையை உருவாக்கியது.

எனவே கடல் படுக்கையாக இருந்த ஒரு மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் இருப்பு இருக்க வேண்டும் என்பது இயற்கையானது” என்றார்.

டெத்தியன் இமயமலை மண்டலம் லடாக்கின் ஜான்ஸ்கர் மலைகளில் 70 கி.மீ அகலமுள்ள பகுதியை ஆக்கிரமித்துள்ளது. எதிர்கால ஷேல் (மென்மையான அடுக்கு பாறைகள்) எரிவாயு / ஷேல் எண்ணெய் ஆய்வுக்கான மிகவும் நம்பிக்கைக்குரிய இலக்குகளில் ஒன்றாகும். இது கிழக்கு திபெத்திய பீடபூமியின் தெற்கு எல்லைகளிலிருந்து மேற்கில் ஜான்ஸ்கர் மலைகள் வரை நீண்டுள்ளது. மேற்கு இமயமலையில், டெத்தியான் இமயமலையின் தொடர்ச்சியானது காஷ்மீர், சான்ஸ்கர், சம்பா மற்றும் ஸ்பிட்டி ஆகிய இடங்களில் நன்கு வெளிப்படுகிறது.

ஹைட்ரோகார்பன் இருப்புகள் லடாக்கில் அதிகம் இருப்பதற்கான சாத்திய கூறுகள் 2018 செப்டம்பரில் தெரிய வந்தது. ஓஎன்ஜிசி, இந்திய புவியியல் ஆய்வு மையம், ஜம்மு பல்கலைக்கழகம், எனி அப்ஸ்ட்ரீம் & தொழில்நுட்ப சேவைகள் (இத்தாலி), பாகிஸ்தான் பெட்ரோலியம் லிமிடெட் (பிபிஎல் ), லண்டன் பல்கலைக்கழக கல்லூரி உள்ளிட்டவை சமர்ப்பிக்கப்பட்ட விரிவான அறிக்கையில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

'இந்திய, பாகிஸ்தான் இடையே உள்ள வடமேற்கு இமயமலையில் ஹைட்ரோகார்பன் இருப்பு' என்ற 77 பக்க அறிவியல் ஆய்வறிக்கையில் "நிலத்தின் பல்வேறு அடுக்குகளின் மட்டங்களில் பொருத்தமான டெக்டோனோ - வண்டல் சூழலில் எரிவாயு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வணிக எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளதை கண்டறிய வடமேற்கு இமயமலை எதிர்காலத்தில் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்கு உகந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஜான்ஸ்கர் - ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மூன்றாம் நிலை மெசோசோயிக் காலத்து களிமண்பாறை வண்டல்களின் கரிமப்பொருள் உள்ளடக்கம் மற்றும் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கிரெட்டேசியஸ் ஈசீன் சிந்து காலத்து மென்மையான அடுக்கு பாறைகள் (ஷேல்கள்) ஆகியவற்றில் ஹைட்ரோகார்பன் இருப்புகள் இருக்க சாத்திய கூறுகள் உள்ளன” என்று கூறுகிறது.

"பொருத்தமான டெக்டோனோ-வண்டல் சூழல், மேற்பரப்பில் எரிவாயு இருப்பது தெரியவந்துள்ளது. (எடுத்துக்காட்டாக, ஜவலமுகி 'தீ கோயிலில்'), மேற்பரப்பு, எண்ணெய், எரிவாயு கண்டுபிடிப்புகள் பரவலாக ஒத்த கட்டமைப்பில் இருப்பது போன்றவை வடமேற்கு இமயமலையின் இந்தியப் பகுதி நீண்டகாலமாக ஹைட்ரோகார்பன்களுக்கு எதிர்காலமாக இருக்கும் கருதப்படுகிறது ”என்று அது கூறுகிறது.

வட மேற்கு இமயமலையின் ஹைட்ரோகார்பன் திறனை கண்டறியும் தீவிர முயற்சிகளில் இந்த கட்டுரையும் ஒன்றாகும்.

புவியியல் தனிமைப்படுத்தல், அதிக உயரம், தீவிர குளிர் உள்ளிட்ட பல காரணிகள் இப்பகுதியின் விரிவான ஆய்வுக்கு இடையூறாக உள்ளன, இதில் “பெரிய அளவிலான சிக்கலான அமைப்பு மற்றும் தீவிரமான டெக்டோனிக் சிதைவு ஆகியவை காரணமாக ஒரே மாதிரியான, உயர்தர நில அதிர்வு விவரங்கள் இல்லாததால் அழுத்தப் பரப்புகளில் மாறுபட்ட திசைவேகங்களுக்கு வழிவகுக்கிறது. சிக்கலான உள் சிதைவு மற்றும் கட்டமைப்புகளை செங்குத்தான துளையிடும் வேகத்துடன் துல்லியமாக சித்தரிப்பது மிகவும் சவாலானது ”.

"சரியான ஆய்வு மேற்கொள்வதற்கு, இமயமலையின் அதிக உயரமான, மிகவும் நில அதிர்வு உணர்திறன் மற்றும் பனிச்சரிவு ஏற்படக்கூடிய மண்டலங்களில் வெடி மூலம் தகர்ப்பது உள்பட பல நடைமுறைகள் செயல்படுத்தப்பட வேண்டும்" என்று அலுவலர் மேலும் கூறினார்.

இதையும் படிங்க: பொருளாதாரத் தோல்வியை எப்போது ஒப்புக்கொள்வீர்கள் பிரதமரே?: ப.சிதம்பரம் கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.