ETV Bharat / bharat

வடமாநிலங்களில் கனமழை! இயல்பு வாழ்க்கை பாதிப்பு

author img

By

Published : Aug 4, 2019, 10:40 AM IST

மும்பை: வடமாநிலங்களான மகாராஷ்டிரா, அஸ்ஸாம், பிகார், மத்தியப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்துவருவதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Heavy rain

வடமாநிலங்களில் பல்வேறு இடங்களில் பெய்துவரும் தொடர் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத அளவிற்கு கனமழை பெய்துவருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. பத்து ரயில்கள் கனமழையின் காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. பிகாரில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டு-வருகின்றனர்.

ஒடிசா மாநிலத்தின் மால்கன்கிரி ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமானதால் கரையை உடைத்துக் கொண்டு வெள்ளம்போல் ஓடுகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்க அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். பொதுமக்கள் தாழ்வான பகுதியை விட்டுவிட்டு மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Intro:Body:

Mumbai Heavy rain

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.